தொட்டது எல்லாம் வெற்றி தான்-சனியால் நன்மை பெற போகும் ராசிகள்
மனிதன் கிரக மாற்றத்தால் இன்பம் துன்பம் மாறி மாறி அனுபவித்து ஆகவேண்டும்.அப்படியாக கிரகங்களில் நம்மை வழிநடத்தி வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பவர் சனிபகவான்.சனிபகவன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார்.
அந்த வகையில் சனிபகவான் இப்பொழுது கும்ப ராசியில் இருக்கிறார்,அவர் வருகின்ற 2025 ஆம் ஆண்டு கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி நிகழ்கிறது. இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதகமான மாற்றத்தை கொடுக்க போகிறது.
இதுவரை அவர்கள் பார்த்த துன்பம் விலகி சந்தோசம் பெற போகிறார்கள்.மேலும் சில ராசிகளுக்கு ஏழரை சனி ஆரம்பமாகும். சில ராசிகளுக்கு ஏழரையின் அடுத்த இரண்டரை ஆண்டுகள் நடைபெறும். அந்த வகையில் சனியின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எந்த மாதிரியான பலன் பெற போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்கு தொழிலில் உண்டான தடை விலக போகிறது.சனி பகவான் உங்களுக்கு 9ஆவது வீட்டிற்கு வருவதால் அஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். இத்தனை நாட்கள் நீங்கள் காத்திருந்த விஷயம் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக கைகூடி வரும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு சாதகமான நிலையில் சனி பகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இருப்பதால் இது அவர்களுக்கு பொற்காலம்.தடை பட்ட காரியம் எல்லாம் வெற்றி பெரும்.முக்கியமாக நல்ல வரன் உங்களை தேடி வரும்.அலுவலகத்தில் இருந்த பணி சுமை குறையும்.வருமானம் நிம்மதியை தரும்.
மகரம்:
மகர ராசிக்கு ஏழரை சனியில் இருந்து விடுபடுவீர்கள்.ஏழரை சனியால் உண்டான கஷ்டம் எல்லாம் படி படியாக குறையும்.இனிமேல் வாழ்வில் உங்களுக்கு வெற்றி தான்.உங்கள் எதிர்காலத்திற்கான வளர்ச்சி பாதையை நோக்கி செல்வீர்கள்.சனி பகவான் இனி உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்வார்.
துலாம்:
சனியின் சஞ்சாரம் மீன ராசிக்கு செல்வதால்,தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.அலுவலகத்தில் உங்களை பாராட்டுவார்கள்.இது நாள் வரை நீங்கள் சந்தித்த பொருளாதார குறைபாடுகள் விலகும்.உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.இனி உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி தான்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இதுநாள் வரையில் சந்தித்த உடல் உபாதைகள் சரி ஆகும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் சந்தோஷத்தை கொடுக்கும்.குடும்பமாக வெளிநாடு பயணம் செல்வீர்கள்.இனி நீங்கள் நினைத்தது நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |