உருவாகும் மங்கள சனி- மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் யார்?
ஒவ்வொரு கிரக மாற்றமும் ஒவ்வொரு ராசிகளுக்கு ஒருவிதமான பலன்களை கொடுக்கிறது.இருந்தாலும், செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை நடைபெறுவதால் சில ராசிகளுக்கு அது நல்லது அல்ல.இந்தமுறை, செவ்வாயும் சனியும் இணைந்து ஆறாம் இடத்திலும், எட்டாம் இடத்திலும் இருப்பதால் ஷடாஷ்டக யோகம் உருவாகி வருவது நான்கு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
மேலும், இந்த நான்கு ராசிக்காரர்களும், வரும் 20ஆம் தேதி வரை பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம். இந்த செவ்வாய் சனி சேர்க்கையால் மிக கவனமாக இருக்கவேண்டிய ராசிகள் கடகம், கும்பம், சிம்மம் மற்றும் மகரம் ஆவர்கள்.
இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு உடல்நல பிரச்சன்னை,குடும்ப பிரச்சனைகள் உருவாகும்.இவர்களை ஒருவித பதற்ற சூழ்நிலையில் வைத்திருக்கும்.பொருளாதார நெருக்கடிகள் இவர்களை சிரமத்தில் தள்ளும்.அலுவலகத்தில் எதிர்பாரா சண்டைகள்,உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் உருவாகும்.
இந்த காலகட்டங்களில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம்.மேலும்,இந்த நேரத்தில் கிரகங்களின் மந்திரங்கள் உச்சரிப்பது அவர்களுக்கு வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றும்.ஆக இந்த காலகட்டங்களில் வரும் பாதிப்புகளை தவிர்க்க பிறருக்கு உதவி செய்யுங்கள்.
சனிபகவானுக்கு உரிய மந்திரமான "ஓம் ஷன் ஷனைச்சராய நம".உச்சரியுங்கள்.அதோடு செவ்வாய் பகவானுக்கு உரிய "ஓம் அங்கரகாய நம" என்று சொல்லுங்கள்.
அதே போல் சனிபகவானுக்கு உரிய கருப்பு எள் மற்றும் இரும்பை தானம் செய்யலாம்.அதை தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு உரிய பருப்பு, செம்பு தானம் செய்வதால் உங்களுக்கு வரும் பாதிப்புகள் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |