அலுவலகத்தில் எந்த ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் இருக்கிறது. அந்த வகையில் அலுவலக்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும், அனைவரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெரும் ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் மிகவும் சிறந்து விளங்குகிறார்கள். இவர்களுக்கு நேரத்தை வீணாக செலவு செய்வது என்பது பிடிக்காத ஒரு விஷயம் ஆகும். வேலை என்று வந்துவிட்டால் இவர்களின் கவனம் முழுவதும் வேலையில் செலுத்தி விரைவில் முடித்து பாராட்டுகளை பெறுவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் மிக சிறந்த ஆராய்ச்சியாளர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் ஆழமாக சிந்தித்து செயல்படுவதால் தடுமாற்றம் இன்றி வெற்றி அடைவார்கள். இவர்கள் எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள். இவர்கள் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள விரும்புவதால் தோல்வி இவர்களுக்கு பிடிக்காத ஒன்று.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் எதையும் மிக சாதாரணமாக கையாளும் தன்மை கொண்டவர்கள். நகைச்சுவை உணர்வு, தொடர்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் அலுவலகத்தில் அனைவரும் இவர்களை மிகவும் விரும்புவார்கள். எதையும் புதிதாக யோசித்து செயல்படும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் எல்லோரிடத்திலும் எளிதாக பழகக்கூடியவர்கள். இவர்கள் புத்திசாலித்தனத்தால் அனைவரையும் விரைவில் தன் வசம் செய்து விடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் முதலீட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக இருப்பார்கள். அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதை இவர்கள் தான் முதலில் சென்று சரி செய்வார்கள் .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |