2025:கேது பகவானின் நட்சத்திர மாற்றம் இந்த 3 ராசிகளுக்கு விபரீத யோகம் கொடுக்கப்போகிறது
கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனிபகவான்.ஆனால் அவரையும் விட மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் கேது பகவான்.அப்படியாக ராகு கேது இணைப்பிரியாத ராசிகள் என்றாலும் இவர்கள் வேறு வேறு ராசியில் பயணம் செய்தாலும் செயல்பாடுகள் ஒரே விதமாக அமையும்.
அதே போல் இந்த கேது பகவானின் ராசி மாற்றம் பல ராசிகளுக்கு பல விதமான தாக்கத்தை உருவாக்கும்.அப்படியாக கேது பகவான் நவம்பர் 10 ஆம் தேதி அன்று பூரம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.
வருகின்ற 2025 ஜூலை மாதம் 20ஆம் தேதி வரை அதே நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.இதனால் பல ராசிகளுக்கு பல விதமான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது.அவை என்ன ராசிகள் என்ன என்று பார்ப்போம்.
மேஷம்:
கேது பகவான் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது.இதனால் இவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.நீண்ட காலமாக உங்களுக்கு ஏற்பட்ட மன வலி முற்றிலுமாக விலகும்.குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.ககுடும்பமாக ஒன்றாக சேர்ந்து செலவிடும் வாய்ப்புகள் உருவாகும்.
கடக ராசி:
கேது பகவான் நட்சத்திர மாற்றம் கடக ராசிக்கு இந்த வருடம் முழுவதும் மிக பெரிய வெற்றியை கொடுக்க போகிறது.உடன் பிறந்தவர்களில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.உறவினர்களிடம் உருவான பிரச்சன்னை படிப்படியாக குறையும்.மற்றவர்களிடத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை கூடும்.தொழிலில் உங்களுக்கான மதிப்பும் லாபமும் அதிகரிக்கும்.
சிம்மம்:
கேது பகவான் நட்சத்திர மாற்றம் சிம்ம ராசிக்கு தொழிலில் பாதையில் நல்ல முன்னேற்றம் கிடைக்க போகிறது.ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.ஏற்றுமதி,இறக்குமதி செய்யும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |