குடும்பத்தை உயிரைக் கொடுத்து பாதுகாக்கும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
சக்திவாய்ந்த உள்ளுணர்வு மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாப்பதில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தினைப் பொறுத்தவரையில் ஒருவரது பிறந்த ராசியே அவர்களின் குணாதிசயம் மற்றும் ஆளுமையை நிர்ணயிப்பதில் முக்கிய பார்க்கப்படுகின்றது.
பொதுவான அனைத்து ராசியினரும் தங்களது உறவினர்கள் மீது அன்பு வைத்திருப்பார்கள். ஆனால் சிலர் அளவில்லாத அன்பும், அக்கறையும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அவ்வாறு சில ராசியினர் தனது உயிரைக் கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தெந்த ராசியினர் இவ்வாறு குடும்பத்தை பாதுகாப்பதற்கு ஹீரோவாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் தங்களது குடும்பத்தினைப் பாதுகாப்பதில் முக்கியமாக காணப்படுகின்றனர். அதாவது சுய பாதுகாப்பு, சக்திவாய்ந்த உள்ளுணர்விற்கு பெயர் பெற்றவராக இருக்கின்றனர்.
குடும்பத்தினரின் மகிழ்ச்சி மற்றும் உரிமைக்காக தீவிரமாக போராடும் இவர்கள், எந்தவொரு சவாலையும் அசால்டாக எதிர்கொண்டு சமாளிப்பார்கள்.
மேலும் தொந்தரவு கொடுப்பவர்களிடம் இருந்தும், தடைகளை எதிர்கொண்டாலும் முன்னே நின்று சமாளிப்பார்கள். ஆகவே குடும்பத்தில் ஒருவர் மேஷ ராசியினராக இருந்தால், எந்தவொரு சவாலையும் சமாளித்துவிடலாம்.

கடகம்
கடக ராசியினர் ராசி சக்கரத்தின் அம்மா என்று அழைக்கப்படுவார்களாம். இவர்களின் அக்கறை, இயல்பான குணம், வளர்ப்பு என தனித்தன்மையுடன் இருப்பார்கள்.
தங்களது குடும்பத்தில் மோதல், ஆபத்துக்களில் இருந்து கவசமாக பாதுகாத்து நிற்பார்களாம். இவர்கள் அமைதியானவர்களாக இருந்தாலும், அன்புக்குரியவர்கள் அச்சுறுத்தலில் இருந்தால் வேறொருவராக மாறிவிடுவார்கள்.
எப்பொழுதும் தனது குடும்பத்தில் பாதுகாப்பான இடங்களை உருவாக்குவதன் மூலமாக தனது விசுவாசத்தினை நிரூபிக்கிறவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினர்கள் இயல்பிலே தங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாப்பதில் திறன் வாய்ந்தவர்கள். தனது குடும்ப நபர்களைக் காப்பாற்றுவதில் சிறிதும் பயம் என்பதை கொள்ளவும் மாட்டார்கள்.
வேண்டுமென்று தனது உறவுகளுக்கு தொல்லை கொடுப்பவர்களை தட்டிக் கேட்க எந்தவொரு எல்லைக்கு்ம செல்வார்கள். குடும்பத்தினரை மட்டுமின்றி தனக்கு பிடித்தவர்களையும் ஆபத்தினை எதிர்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள்.
இவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒருவரை காயப்படுத்தக்கூடிய சூழ்நிலையினைக் கூட முன்கூட்டியே கணித்துவிடுமாம். அன்புக்குரியவர்களின் துன்பத்தினை போக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சியினை செய்துவிடுவார்கள்.

மகரம்
மகர ராசியினர் நேர்மறையான அணுகுமுறையினைக் கடைபிடிப்பதில் நிதானமாக கடைபிடிப்பார்கள். ஏனெனில் ஒழுக்கம், கர்மா இவற்றின் அதிபதியாக இருக்கும் சனிபகவான் மகரத்தினை ஆள்கின்றார்.
தங்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சனையையும் தட்டிக் கேட்பதில் பயப்படுவதே கிடையாது. தங்களின் அன்புக்குரியவர்களை பாதுகாப்பதற்கு இவர்களின் திறன், ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்துவார்கள். மேலும் மகர ராசியினர் தனது குடும்பத்தை எந்த விடயமும் நீண்டகாலம் தொந்தரவு செய்வதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |