முதலாளி ஆகும் யோகம் எந்த நட்சத்திரத்திற்கு தெரியுமா?
ஜோதிடத்தில் 12 ராசிகளும் 27 நட்சத்திரமும் இருக்கிறது. அதில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் இருக்கிறது.
அப்படியாக எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக பணம் சம்பாதிக்கும் யோகமும், வெற்றிகரமாக ஒரு தொழில் தொடங்கி அதில் வெற்றி பெரும் யோகமும் கிடைக்கும் என்று பார்ப்போம்.
உத்திரம் நட்சத்திரம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் வசீகரமான தோற்றம் உடையவர்கள். இவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். தொழில் தொடங்கும் முன் லாப நஷ்டத்தை ஆராய்ந்து செய்வார்கள். இவர்களுக்கு ஒருவரிடம் எவ்வாறு பேசி வேலை வாங்கவேண்டும் என்று தெரியும் என்பதால் இயற்கையாவே இவர்கள் முதலாளிதத்துவம் உடையவர்களாக இருப்பார்கள்.
விசாகம் நட்சத்திரம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே மன வலிமை கொண்டவர்கள். அவர்கள் எதையும் திட்டமிட்டு செய்வதில் சிறந்து விளங்குபவர்கள். இவர்களுக்கு பயம் என்ற ஒரு நிலையே கிடையாது. சரியான திட்டமிடல் கொண்டு வியாபாரம் செய்வதிலும், பிறரை வழி நடத்துவதிலும் வல்லவர்கள் என்பதால் இவர்களுக்கு இயல்பாகவே முதலாளி தன்மை உண்டு. இவர்களுடைய வாழ்க்கையிலும் முதலாளியாக இருக்கும் நிலை தான் உருவாகும்.
திருவோணம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புத்தி கூர்மை அதிகம். இவர்களுடைய திறமைக்கு ஏற்ப கடின உழைப்பை போடக்கூடியவர்கள். இவர்கள் அறநெறிகளுடன் செயல்பட கூடியவர்கள். எப்பொழுதும் தலைமை பண்பை விரும்பக்கூடியவர்கள். அதே போல் தலைமை பதவியும் இவர்களை தேடி வரும். இவர்களுக்கு பிறரிடம் கைகட்டி வேலை பார்ப்பது என்பது சுத்தமாக பிடிக்காத விஷயம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |