பாம்பு மோதிரம் யார் அணியலாம்?யார் அணியக்கூடாது?
காலம் மாறி கொண்டே இருக்கிறது.நாகரிகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.அதில் சமீப காலமாக பலரும் அணிந்து கொண்டு வரும் ஆபரணங்களில் பாம்பு மோதிரம் ஒன்று.இதை பெரும்பாலாக இளைஞர்கள் தான் அணிந்து வருகின்றனர்.நாம் இப்பொழுது இந்த பாம்பு மோதிரம் அணியலாமா?யார் அணியக்கூடாது?இதனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஜோதிட சாஸ்திரம் படி சில மோதிரங்கள் அணிவதின் மூலம் நம்முடைய கிரக தோஷங்கள் விலகும் என்று சொல்லப்படுகிறது.அதாவது அதை அணிவதின் மூலம் நம்முடைய காரிய தடைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில் இந்த பாம்பு மோதிரம் பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதால் அதை மக்கள் அணிய விரும்புகின்றனர். நாம் காலசர்ப்ப தோஷம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.இந்த காலசர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு கல்யாணத்தில் தடை,தொழில்,படிப்பு எதை எடுத்துக்கொண்டாலும் தடை ஏற்பட்டு கொண்டு இருக்கும்.
அப்படியானவர்கள் நிச்சயம் இந்த பாம்பு மோதிரம் அணிவதால் அவர்களுக்கு நன்மைகள் நடக்கிறது.மேலும் சிலருக்கு பயம்,எதிர்மறை ஆற்றல் அவர்களை சூழந்து இருப்பது போல் உணர்வார்கள் அவர்களும் கட்டாயம் இந்த பாம்பு மோதிரம் அணியலாம்.
அது அவர்களை பாதுகாப்பாக வைக்கிறது. ஆனால் ஒருவர் பாம்பு மோதிரம் அணியவேண்டும் என்று விருப்ப பட்டால் கட்டாயம் அவர்கள் நல்ல ஜோதிடரை அணுகி அவர்கள் எந்த கை விரலில் அணிந்தால் நன்மை உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.பொதுவாகவே பாம்பு மோதிரத்தை, மோதிர விரல் அல்லது ஆள்காட்டி விரலில் தான் அணிய வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |