குரு பார்வையால் அடுத்து 3 மாதத்திற்கு இவர்கள்தான் ராஜாவாம்
ஜோதிடத்தில் குரு பகவான் ஞானம், அறிவு, செல்வம் அதிர்ஷ்டம் ஆகியவனுக்கு அடையாளமாக இருக்கிறது. ஒருவர் பிறப்பின் ஜாதகத்தில் குருபகவான் வலுவாக இருந்தால் அல்லது குரு பார்வை நல்ல ராசிகளில் இருந்தால் அந்த நபர் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையில் அடைந்து பெயரும் புகழ்களுடன் வாழ்வார்கள். அப்படியாக அடுத்து வருகின்ற மூன்று மாதங்களுக்கு குரு பகவான் உடைய பார்வையால் தனலட்சுமி யோகம் உருவாக உள்ளது.
இதனால் இவர்களுக்கு பண பற்றாக்குறை விலகி வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகி சந்தோஷம் அடையப் போகிறார்கள். அப்படியாக எந்த 3 ராசியினர் குரு பார்வையால் அதிர்ஷ்டத்தை அள்ள போகிறார்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
அடுத்த மூன்று மாதங்களுக்கு குருவின் பார்வையால் மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். தொழில் ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப் போகிறார். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம், குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகி இவர்கள் மகிழ்ச்சியாக வாழும் காலமாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிகளுக்கு வாய்ப்புகள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது அளவிற்கு அற்புதமான வாய்ப்புகள் இவர்களை தேடி வர காத்திருக்கிறது. சிலருக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அக்கப் பக்கத்தினரிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். உங்களுடைய பெற்றோர்கள் உங்கள் மன நிலை புரிந்து நடந்து கொள்வார்கள். உங்களுடைய வாழ்க்கை துணை உங்களுடைய தேவைகள் அனைத்தயும் பூர்த்தி செய்வார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழக் போகிறீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு அடுத்து வரும் மூன்று மாத காலங்களில் மன அழுத்தங்கள் குறைந்து வாழ்க்கையில் ஒரு நிம்மதி நிலையை அடையப் போகிறீர்கள். குடும்பங்களில் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். சிலருக்கு குடும்பங்களுடன் வெளியூர் பயணம் வெளிநாடு பயணம் செல்ல அற்புதமான வாய்ப்புகள் உருவாகும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்து மகிழ்ச்சி பெறப்போகிறீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







