ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா?

By Sakthi Raj Oct 31, 2026 10:43 AM GMT
Report

ஜோதிட ரீதியாக நாம் முக்கியமான விஷயங்களை கிரக அமைப்புகளை கொண்டு கட்டாயமாக கணிக்க தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், மனிதர்களாக பிறந்த எல்லோருக்குமே பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இவையெல்லாம் பெரிய அளவில் இல்லை என்றாலும் நிலையான வருமானமாவது இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், நிலையான வருமானம் என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.

சில காலகட்டங்களில் வேலையில்லாமல் போய்விடுகிறது, கையில் பணம் இருந்தாலும் தங்காமல் வேறு ஒரு செலவு கடன் என்று வந்து கொண்டிருக்கிறது.

ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா? | Who Gets Stable Income According Astrology

குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்...எப்படி இருப்பது?

குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்...எப்படி இருப்பது?

அப்படியாக, ஜாதக ரீதியாக எந்த அமைப்பு உடையவர்களுக்கு அழியாத பெயரும் புகழும் பணமும் நிலையான வருமானமும் இருக்கும் என்று பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் சூரிய கேந்திரத்தில் சந்திரனும், சந்திர கேந்திரத்தில் சூரியனும் நின்றால் ஜாதகருக்கு நிரந்தரமான வருமானம் உண்டு. அல்லது மதிப்பு குறையாமல் வாழக்கூடியவராக இருப்பார்.

ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா? | Who Gets Stable Income According Astrology

ஏழரை சனி யாருக்கு அதிக பாதிப்பு கொடுக்கும்.. யார் ராஜயோகம் அனுபவிக்கப் போகிறார்கள்

ஏழரை சனி யாருக்கு அதிக பாதிப்பு கொடுக்கும்.. யார் ராஜயோகம் அனுபவிக்கப் போகிறார்கள்

அதேபோல், சூரிய கேந்திரத்தில் சந்திரன் நின்று லக்னாதிபதியும் லக்ன கேந்திரத்தில் நின்று விட்டால் வாழ்க்கை சிறப்பிற்கு ஒரு அடித்தளமாக அமைந்து அவர்கள் உயர்ந்து விடுவார்கள்.

மேலும், சூரிய சந்திரர்கள் நின்ற ராசியாதிபதியும் கேந்திரத்தில் ஒன்றில் நின்று விட்டால் இவர்கள் முழுமையான வலிமை பெற்ற இந்த ஜாதகராகவும் சமுதாயத்தில் ஒரு பெரிய புகழும் மதிப்புமிக்க ஒரு இடத்தையும் பெற்று விடுகிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US