குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்...எப்படி இருப்பது?

By Sakthi Raj Oct 31, 2026 09:29 AM GMT
Report

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் மிக முக்கியமானதாக இந்த கந்தசஷ்டி விரதம் இருக்கிறது. இதனை சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைக்கிறார்கள். இது திதி விரதம் ஆகும். அதாவது "சங்கரின் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்" என்று வேடிக்கையாக சொல்வார்கள்.

அதாவது முருகன் சட்டியிலே மாவை வறுத்தார் என்று சொல்கிறார்கள். உண்மைதான். அவர் சட்டியில் அதாவது சஷ்டி திதியிலே மா அறுத்தார் என்றால் மாமரமாக நின்ற சூரபத்மனை அறுத்தார். முருகப்பெருமான் சூரபத்மனுடன் ஆறு நாட்கள் தொடர்ந்து போரிட்டு ஆறாம் நாள் மாமரமாக எதிர்த்துப் போரிட்ட அவனை தனது வேலாயுதால் பிளந்தார்.

குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்...எப்படி இருப்பது? | Kanda Sashti Viratham For Pregnancy And Procedure

2026: நவம்பர் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷங்கள் விரத நாட்கள்

2026: நவம்பர் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விசேஷங்கள் விரத நாட்கள்

பிளந்த ஒரு கூறு மயில் ஆனது. அதை முருகப்பெருமான் தன் வாகனமாக ஏற்றுக்கொள்கிறார். மறுகூறு சேவலாயிற்று. 

அதை அவர் தன்னுடைய கொடியாக ஏந்தி கொண்டார். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் அதாவது தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் விரதத்தை துவங்கி சஷ்டி வரை ஆறு நாட்கள் முருகப்பெருமானை வழிபடும் கடுமையான விரதமாக இந்த கந்த சஷ்டி விரதம் உள்ளது.

இதனை மகா சஷ்டி விரதம் என்று சொல்கிறார்கள். வழிபாடு முறைகள்: கந்த சஷ்டி விரதமாக இருக்கக்கூடிய இந்த ஆறு நாட்களிலும் காலையில் எழுந்து நீராடி ஆறு காலங்களிலும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்து ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை மனமுருகி வழிபாடு செய்வது அவசியம்.

குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்...எப்படி இருப்பது? | Kanda Sashti Viratham For Pregnancy And Procedure

ஏழரை சனி யாருக்கு அதிக பாதிப்பு கொடுக்கும்.. யார் ராஜயோகம் அனுபவிக்கப் போகிறார்கள்

ஏழரை சனி யாருக்கு அதிக பாதிப்பு கொடுக்கும்.. யார் ராஜயோகம் அனுபவிக்கப் போகிறார்கள்

இந்த காலகட்டங்களில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் ஆகியவற்றை பாராயணம் செய்வது அவசியம். அதேபோல், சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்கின்ற ஒரு மொழி இருக்கிறது.

சட்டியில் ன்றால் சஷ்டி திதியில் விரதம் இருந்தால் கர்ப்பப்பையில் கருத்தோன்றும் என்பது இதனுடைய பொருளாகும். நீண்ட நாட்கள் குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு இந்த கந்தசஷ்டி விரதம் ஒரு அருமையான வாய்ப்பாக அமையும்.

கடுமையாக விரதம் இருந்து மனதார முருகப்பெருமானை நினைத்து இந்த விரதம் மேற்கொள்கின்ற பொழுது விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US