திருப்பதி பெருமாள் பலருக்கும் குலதெய்வம்... அவருடைய குலதெய்வம் யார் தெரியுமா?
பலர் குடும்பங்களுக்கு திருப்பதியில் வீற்றிருக்கக்கூடிய வேங்கடவன் குலதெய்வமாக இருக்கிறார். அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யார் தெரியுமா? அதைப்பற்றி பார்க்கலாம். திருப்பதியில் இருக்கக்கூடிய வெங்கடாசலபதிக்கு குலதெய்வம் ஸ்ரீ நரசிம்மராவார்.
ஸ்ரீநிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிகையில் குலதெய்வம் என்ற காலத்தில் ஸ்ரீ நரசிம்மரை போடுமாறு ஸ்ரீநிவாசர் கூறுகிறார்.

அன்று தயாரிக்கப்பட்ட விருந்து முதலில் ஸ்ரீ நரசிம்மருக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு அனைவருக்கும் சாப்பிடுவதற்கு வழங்கப்படுகிறது.
திருமணம் முடிந்து ஸ்ரீனிவாசரும், லட்சுமி தேவியும் ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிபாடு செய்கின்றனர். இந்த விவரங்கள் எல்லாம் வெங்கடேச மஹாத்மியம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.
சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்

ஸ்ரீமத் பாகவதத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிக மிக முக்கியமான ஸ்லோகமாகும். அதாவது நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்பிக்கையுடன் சொன்ன அந்த பக்தன் பிரகலாதனின் வாழ்க்கை காப்பாற்ற வேண்டி மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் நரசிம்மராக கம்பத்திலிருந்து தோன்றினார்.
ஆக, பெருமாள் என்றாலே பேரானந்தம். அவரை இந்த புரட்டாசி மாதத்தில் வழிபாடு செய்து மிகப் பெரிய அளவில் மாற்றங்களையும் அவருடைய அருள் ஆசியை பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |