இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய நண்பர்களா? கவனமாக இருங்கள்
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அப்படியாக ஒவ்வொரு மாதங்களில் பிறந்த மனிதர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அப்படியாக குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த மனிதர்கள் நமக்கு நண்பர்களாக கிடைக்கும் பொழுது அவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் அதை பற்றி பார்ப்போம்.
மார்ச்:
இந்த மாதத்தில் பிறந்த மனிதர்கள் சற்று சுயநலமாக இருப்பார்கள். அவர்கள் நட்பையும் சுயநலத்திற்காக பயன்படுத்தக் கூடியவர்களாக விளங்குவார். இவர்கள் நமக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்கள் நமக்கு வந்து உதவுவார்கள் என்று எண்ணுவதை தாண்டி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நாம் அவர்களுடன் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். நட்பாக பழகக் கூடியவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றாலும் அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஜூன்:
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் பிறரை தங்களுடைய வளர்ச்சிக்காக பயன்படுத்தக் கூடிய நபராக இருப்பார்கள். அவர்களுக்கு நாம் எப்பொழுதும் ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இவர்கள் பேசுவதில் கில்லாடிகள். இவர்களுடன் நட்பை நீட்டிக்க வேண்டும் என்றால் ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் மனம் வைத்தால் மட்டுமே முடியும். இவர்கள் அவ்வளவு எளிதாக ஒரு நட்பை அவர்கள் வட்டத்திற்குள் விடமாட்டார்கள்.
ஆகஸ்ட்:
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தன்னுடைய சுயநலத்திற்காக நட்பை எவ்வளவு அன்பான வார்த்தைகள் பேசியும் உடன் வைத்திருக்க நினைப்பவர்கள். இவர்களை எப்பொழுதும் போற்றி பேசிக் கொண்டே இருக்கும் வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த மாதத்தில் பிறந்தவர்களை பற்றி புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். புகழ்ந்து பேசுதல் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
டிசம்பர்:
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களிடம் நாம் எதையும் நம்பி ஒரு விஷயத்தை ஒப்படைக்க முடியாது. அவர்கள் சுயநலத்திற்காக தங்களுடைய நியதியை மாற்றிக் கொண்டே இருக்கும் நபர்கள். நட்பாகவே இருந்தாலும் அவர்கள் சுயநலமாகவே பழகக் கூடியவர்கள். இவர்களுடைய சுயநல சிந்தனைகளால் நட்புகளை பெரும்பாலான நேரங்களில் அவர்கள் மறந்து விடுவதும் உண்டு. மேலும் இவர்கள் ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் பொழுது அவர்கள் மனம் காயப்படுமா என்று யோசிக்காமல் விமர்சித்து விடுவதால் இவர்களிடம் நட்பாக பழகுவது சற்று கடினமான காரியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







