உங்கள் கையெழுத்து இதுவா? உங்களுடைய குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மனிதனின் ஒரு அடையாளம் கையெழுத்து ஆகும். அப்படியாக ஜோதிடத்தில் ஒவ்வொருவர் கையெழுத்திற்கு பின்னாலும் ஒரு காரணங்களும் அவர்களுக்குரிய குணாதிசயங்களும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் மற்றும் குரு பகவான் வலிமையாக இருந்தால் அவர்கள் தங்களுடைய அடையாளத்தை இந்த உலகத்திற்கு முழுமையாக காட்ட வேண்டும் என்று எண்ண கூடியவர்கள். சூரியன் மற்றும் குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் வலுவாக இருக்க அந்த நபர் மிகவும் ஒழுக்கமான நபராகவும் சமுதாயத்தில் தங்களுக்கு என்று ஒரு பெயர் எடுக்க வேண்டும் என்ற ஒரு உறுதியோடு செயல்படுவார்கள்.
இவர்கள் தங்களுடைய கையெழுத்தை முழு பெயராக இடுவதையே விரும்புவார்கள். இவர்களுடைய பெயரை முழுமையாக இந்த உலகத்திற்கு தெரிவிக்க முழு பெயரையே கையெழுத்தாக போடக்கூடியவர்கள்.
ஒரு சிலர் தங்களுடைய பெயரின் முதல் எழுத்தை மட்டும் கையெழுத்தாக போடுவார்கள். அவ்வாறு போடுபவர்கள் ஜாதகத்தில் சந்திரன் சுக்கிரன் பலமாக இருப்பார்கள். இவர்கள் முழு சுதந்திர சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் தங்களுடைய பெயரின் தொடக்க எழுத்துக்களை கொண்டு கையெழுத்து போடுவார்கள்.
அவர்கள் அவ்வளவு எளிதாக எல்லோரிடமும் பழகக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள். தனக்கென்று ஒரு வாழ்க்கையும் தன்னுடைய நட்பு வட்டாரம் சுற்று வட்டாரம் இவர்களை மிகவும் சுருக்கமாக கொண்டு வாழ வேண்டும் என்று எண்ண கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் சனி கேது வலுவாக இருந்தால் தங்களுடைய முதல் எழுத்துக்களை கொண்டு கையெழுத்து போடும் அமைப்பு இவர்களுக்கு இருக்கும்.
சிலர் தங்களுடைய கையெழுத்தை மிகவும் அழகாக வடிவமாக போட வேண்டும் என்று நினைப்பார்கள். சுக்கிரன் ராகு அமைப்பு கொண்டவர்களுக்கு இவ்வாறான கையெழுத்து போடும் அமைப்பு உருவாகும்.
இவ்வாறன அமைப்பு கொண்டவர்கள் படைப்பாற்றல் மற்றும் கலை உணர்வுகளில் அதிக ஆர்வம் கொண்டு விளங்குவார்கள். இவர்கள் எதையும் அவ்வளவு வெளிப்படையாக சொல்லி விட மாட்டார்கள். ஒரு மாயை உலகத்தில் வாழ்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







