இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கை துணை என்பது மிகவும் முக்கியம் என்றாலும், நமக்கு அமையும் துணை சிறந்த பண்புகள் கொண்டு இருக்க வேண்டும். அவ்வாறு அமையாத பட்சத்தில் அவர்கள் வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களை சந்திக்கும் நிலை உருவாகும்.
அப்படியாக, ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குண நலன்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட இந்த மூன்று மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
மே:
மே மாதத்தில் பிறந்த ஆண் மிகுந்த பொறுப்புகளோடு செயல்படக் கூடியவர்கள். பிறரது உணர்வுகளுக்கு மதிப்பு வழங்கும் குணம் கொண்டவர்கள். அதிலும் இவர்களின் துணை என்று வந்து விட்டால் அவர்களுக்கு அதிக அளவில் மதிப்பும் மரியாதையும் வழங்குவார்கள். இவர்கள் பிறரை காயப்படுத்த மாட்டார்கள். இவர்கள் துணைக்கு என்ன வேண்டுமோ அதை பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள்.
ஜூன்:
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் மிக சிறந்த ஆளுமை கொண்டு இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள். இவர்கள் துணையை மிகவும் நேசிப்பார்கள், அவர்களுக்கு எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். மனைவிக்கு எப்பொழுதும் நல்ல நண்பராக கணவராக இருக்க விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண் ஒரு பெண்ணிற்கு கணவராக அமையும் பொழுது அந்த பெண் மிக பெரிய அதிர்ஷ்டசாலி ஆகின்றாள்.
அக்டோபர்:
அக்டோபர் மாதத்தில் பிறந்த ஆண் எல்லோரிடத்திலும் அன்போடும் பழகும் குணம் கொண்டவர்கள். இவர்கள் மனைவிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இவர்கள் மனைவி இடத்தில் அதிக அன்பும் பாசமும் வைத்திருப்பார்கள். இவர்கள் திருமண வாழ்க்கைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால், இந்த மாதத்தில் பிறந்த ஆண் ஒரு பெண்ணிற்கு கணவராகும் பொழுது அவள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கின்றாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







