இந்த உலகத்தில் பலரும் விட்டுக் கொடுத்து சென்றவர்களையும் ஒருவருக்காக ஒரு விஷயத்தை அர்ப்பணித்தவர்களை பல நேரங்களில் மறந்து விடுகிறது. அப்படியாக, புத்தர் ஞானம் பெற்றதும் அவருடைய மனைவியையும் குழந்தையையும் பார்க்கப் போகிறார்.
அப்பொழுது புத்தரின் மனைவி கேட்கிறார் என்னை விட்டு நீங்கள் சென்றது கூட பரவாயில்லை. ஆனால், என்னிடம் நீங்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே நான் ஒன்றும் நீங்கள் போகும் பாதையை தடுத்து இருக்க மாட்டேன்.
ஆனால், நீங்கள் என்னை நம்பவில்லை என்ற இந்த நினைப்பே என்னை இத்தனை காலம் மிகவும் புண்ணாக்கிவிட்டது. ஏன்? என்னை காயப்படுத்துனீர்கள் என்று அவர் கேட்கிறார்.

புத்தர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு சொல்கிறார், அந்த நேரத்தில் நான் பயந்தது உன்னை பற்றி அல்ல, என்னை பற்றி தான் என்கிறார். அதாவது மனைவி மகனின் முகம் பார்த்தால் தான் நிலைகுலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாக கூறுகிறார். அடுத்து அவரின் மனைவி ஒரு ஆழமான கேள்வியை கேட்கிறார்.
நீங்கள் இந்த அரண்மனையை விட்டுப் போகாமல் இங்கே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா? அதற்கு புத்தர் சொல்கிறார் தாராளமாக முடியும்.

அதற்கு நான் காடு, மழை ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால், இங்கிருந்து நான் ஓடிப் போகும் போது நான் அதை தெரிந்து கொண்டிருக்கவில்லை.
உண்மையில் எங்கிருந்தாலும் ஞானம் கிடைத்திருக்கும். இடம் ஒரு பொருளே இல்லை என்கிறார். மேலும், புத்தருடைய வாழ்க்கை போற்றும் யாரும் அவருடைய மனைவி யசோதராவை போற்றுவதே இல்லை அவரை பற்றி பேசுவதும் இல்லை. புத்தர் போன பிறகு அவரின் மனைவி அவருடைய தலை முடியை அர்ப்பணித்துவிட்டு, ஆடை அலங்கோலமாக மாற்றிக் கொண்டார்.
எல்லாவற்றையும் துறந்து எந்த தொந்தரவும் இல்லாமல் துறவியானார். புத்தர் மனைவி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எல்லா துயரங்களையும் அனுபவித்தபடி துறவியாக வாழ்ந்தார். இதில் எது கடினம்? இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். இங்கு யார் துறவி என்று?
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |