இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் எப்பொழுதும் இளமையாக இருப்பார்களாம்
நம்முடைய வாழ்க்கையில் நவகிரகங்களுடைய பங்கு அதிகம் இருக்கிறது. அந்த வகையில் ஒருவருடைய வாழ்வை மாற்றக்கூடிய முக்கிய கிரகமாக இந்த புதன் பகவான் இருக்கிறார். அப்படியாக புதன் பகவானை பற்றி பலரும் அறிந்திடாத முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
புதன் பகவானை பொருத்தவரை அவர் எந்த கிரகத்துடன் சேர்கிறாரோ அவர் அந்த கிரகமாகவே செயல்பட தொடங்கி விடுவார். அதாவது நல்லவருடன் சேர்க்கை கொண்டால் நல்லவராகவும், கெட்டவருடன் சேர்க்கை கொண்டால் கெட்டவராகவும் இவர் செயல்படுகிறார்.
அப்படியாக புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் அவர்களுக்கு வயதே ஆகாது. எப்போதும் இளமையான தோற்றத்துடனும் நல்ல அறிவாற்றலான பேச்சுடனும் இருப்பார்கள். அதேபோல் நகைச்சுவை பேசுவதிலும், கணக்கு தொடர்பான விஷயங்களிலும் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

தாய் மாமாவுடன் மிகப்பெரிய அளவில் நெருக்கமான உறவு இருக்கும். மேலும் நவகிரகங்களிலே கன்னி ராசியில் மட்டும்தான் புதன் பகவான் ஒரே நேரத்தில் ஆட்சியும் உச்சமும் பெறுகிறார். இது வேற எந்த கிரகத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாகும்.
அதோடு, நீங்கள் மிகவும் புதன் பகவான் ஆசீர்வாதம் பெற்று அறிவாற்றலுடனும் புத்தி கூர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் புதன்கிழமை தோறும் பச்சை பயறு தானம் செய்தும் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |