வீட்டில் குலதெய்வம் நிரந்தரமாக தங்க என்ன செய்ய வேண்டும்?
ஒரு குடும்பத்தை காக்கக்கூடிய தெய்வமாக குலதெய்வம் இருக்கிறது. நாம் எவ்வளவுதான் நம்முடைய இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்தாலும் நமக்கு குல தெய்வங்களுடைய அருள் இருந்தால் தான் நம் வாழ்க்கையில் எந்த ஒரு தடையும் அசுபமான நிகழ்வுகளும் நடக்காமல் இருக்கும். அப்படியாக நம் வீட்டில் குலதெய்வம் நிரந்தரமாக தங்கவும் குல தெய்வத்தின் முழு ஆசிர்வாதம் பெறவும் நம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

மண்:
குலதெய்வம் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது அங்கு இருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து ஒரு சிவப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி சந்தனம் குங்குமம் வைத்து வீட்டின் நுழைவாயிலில் அல்லது பூஜை அறையில் வைக்க வேண்டும்.
காரணம் குலதெய்வம் கோவிலில் இருக்கக்கூடிய மண்ணிற்கு அதிக அளவில் சக்தி நிறைந்திருக்கிறது. இதனால் நம் வீடுகளை தீய சக்திகள் அல்லது கிரக பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
அடுத்த முறை குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுது இந்த மண்ணை நாம் ஆற்றில் கரைத்து விட்டு புதிய மண்ணை எடுத்து வந்து வைக்க வேண்டும். வீடுகளில் குலதெய்வம் மண் வைத்திருக்கும் சமயத்தில் நாம் வீடுகளை மிகவும் சுத்தமாக பராமரிப்பது அவசியமாகும்.
எலுமிச்சை பழம்:
குலதெய்வம் கோவிலுக்கு செல்பவர்கள் தவறாமல் குலதெய்வம் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை நம் வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது ஒரு நல்ல அதிர்வலை கிடைக்கும். இதையும் நாம் சிவப்பு துணியில் கட்டி சந்தனம் குங்குமம் வைத்து நிலை வாசல் அல்லது பூஜை அறையில் வைத்து விடலாம்.

சாம்பல்:
குலதெய்வ கோயிலில் நடைபெறும் தீமிதி நிகழ்வுகளில் பயன்படுத்தக்கூடிய சாம்பலை நம் வீட்டிற்கு எடுத்து வரலாம். இதை பூஜை அறையில் திருநீருடன் கலந்து வைத்துக் கொண்டு தினமும் பூசி வந்தால் கண் திருஷ்டி எதிரிகளால் வரக்கூடிய பாதிப்புகள் போன்றவை விலகும்.
சந்தனம்:
குலதெய்வ கோவிலில் இறைவனுக்கு அபிஷேகத்திற்காக பயன்படுத்தக்கூடிய சந்தனத்தை நம் வீட்டிற்கு எடுத்து வந்து நிச்சயம் பயன்படுத்தலாம். செவ்வாய் வெள்ளி அல்லது பிற தினங்களிலும் சிறிது ஜவ்வாது பொடியுடன் கலந்து தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் இந்த சந்தனத்தை தெளித்து வந்தாலும் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். இதனால் வீட்டில் அதிர்ஷ்டமும் மகாலட்சுமியின் அருளும் நமக்கு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |