நீங்கள் சிம்ம ராசியில் பிறந்தவர்களா? கஷ்ட காலங்களில் உங்களுக்கு உதவும் ராசிகள் யார்?
சிம்ம ராசியை பொறுத்தவரை அவர்கள் சூரியனின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். அந்த வகையில், சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கஷ்ட காலங்களில் உதவக்கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம். சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தாய் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள்.
தாயின் ஆதரவு இவர்களுக்கு மிக மிக அவசியம். தாயின் ஆதரவால் இவர்கள் மிகவும் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள். ஆனால், தந்தையை பொறுத்தவரை தந்தையின் நட்சத்திரத்தைப் பொறுத்து இவர்களுக்கு ஒரு நண்பராகவோ அல்லது இவர்களை கட்டுப்படுத்துபவராக இருக்கக்கூடும்.
உடன் பிறந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளும் பொழுது இவர்களுக்கு உறவு சற்று கலவையான பலன்களை தான் கொடுக்கிறது. சில நேரங்களில் இவர்கள் சகோதர உறவுகளால் நல்ல ஆதரவை பெற்றாலும் சில நேரங்களில் சில சிக்கல்களை கொடுக்கிறது.
மேலும், வாழ்க்கைத் துணையுடன் தொழில் மற்றும் கூட்டு முயற்சி செய்வதை இவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையை சற்று அனுசரித்து செல்வதால் மட்டுமே இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.
சிம்ம ராசியினருக்கு குடும்பத்தை காட்டிலும் நண்பர்களுடைய ஆதரவு மற்றும் உதவி தான் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
அதோடு, சிம்ம ராசியினர் தொழில் அல்லது பிற முக்கிய விஷயங்களில் கூட்டு முயற்சிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் இவர்கள் பெரிய அளவில் ஆபத்துகளை சந்திப்பார்கள்.
மேலும், இவர்கள் உறவுகளை குறித்து எந்த முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் கவனமாக எடுப்பது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |