ரிஷப ராசிகளுக்கு எப்பொழுதும் உதவக்கூடிய உறவுகள் யார் தெரியுமா?
ஜோதிட ரீதியாக சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்ற ரிஷப ராசியினக்கு எந்த உறவுகள் வாழ்க்கையில் உறுதுணையாக இருப்பார்கள் என்று பார்ப்போம். ரிஷப ராசியை பொறுத்தவரை இவர்களுக்கு தாய் ஒரு தெய்வீகமான சக்தியாக இருக்கிறார்கள்.
இவர்கள் எந்த ஒரு புதிய முயற்சியையும் துவங்கும் முன்பு தாயிடம் ஆசி பெற்று துவங்குவது நன்மை கொடுக்கும். அதே போல், இவர்களுக்கு தந்தையுடன் இருக்கின்ற உறவு பெரும்பாலும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.
இருப்பினும் பொருளாதாரத்தில் இவர்களுக்கு அவர்களால் மிகப்பெரிய அளவில் உதவி செய்ய முடியாத நிலை உருவாகி வருகிறது.
வாழ்க்கை துணையை பொறுத்த வரை இவர்களிடம் தொழில்முறை பங்காளியாக பார்ப்பதை காட்டிலும் அன்பு மற்றும் உணவுப்பூர்வமான உறவாக மட்டும் பார்ப்பது நன்மையை கொடுக்கும்.
மேலும், இவர்களுடன் இணக்கமாக செயல்படுவதற்கு சற்று பொறுமை அவசியம். இவர்கள் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்கள் தேவையற்ற யோசனைகளை வழங்கலாம்.
அதே போல், ரேவதி நட்சத்திர நண்பர்கள் இவர்களுக்கு சரியான வழி காட்டுதல் வழங்குவது இல்லை. மேலும், ரிஷப ராசிக்கு எந்த உறவுகள் எப்பொழுதும் துணையாக இருப்பார்கள் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |