இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

By Sakthi Raj Aug 26, 2026 10:28 AM GMT
Report

இந்த உலகத்தில் நாம் செய்ய முடியாத காரியம் என்று ஒன்று இல்லவே இல்லை. நாம் மனதார நினைத்து செய்யக்கூடிய எல்லா விஷயங்களுக்கும் நிச்சயம் இந்த பிரபஞ்சத்தால் ஒரு நல்ல அருள் உண்டு.

அதேபோல், எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் அதற்குரிய ஆலயம் சென்றால் நிச்சயம் அதற்கான தீர்வையும் பெறலாம். அந்த வகையில், நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபட செல்ல வேண்டிய முக்கியமான ஆலயங்களை பற்றி பார்ப்போம்.

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள் | 3 Temple We Must Visit In Difficult Times

2026: இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த 3 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்

2026: இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த 3 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்

1. இழந்த செல்வம் மீட்டு தரும் தென்குரங்காடுதுறை:

திருஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென் குரங்காடுதுறை அங்கு வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரர் இழந்த செல்வங்களை எல்லாம் மீட்டுக் கொடுக்கக்கூடிய தெய்வமாக இருக்கிறார்.

வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்ய ஸ்ரீ ராமபிரானின் அருள் கிடைத்து தான் இழந்த செல்வங்களை எல்லாம் மீட்டு பெற்றான். வானரமாகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால் இத்தலம் தென் குரங்காடுதுறை என்ற பெயர் பெற்றது.

2. செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்:

"திருவாடுதுறை" கும்பகோணம் மாயவரம் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆடுதுறை எனப்படுகின்ற திருவாடுதுறை திருஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருட்களைக் கேட்க சம்பந்தரும் இந்த தல இறைவனை மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட பரம்பொருளும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலிபீடத்தின் மீது வைத்த அருளினார்.

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள் | 3 Temple We Must Visit In Difficult Times

கோயில் மற்றும் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 8 தவறுகள்

கோயில் மற்றும் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 8 தவறுகள்

3. மரண கண்டம் நீக்கும் திருநீலக்குடி :

ஒருவர் ஜாதகத்தில் மரண கண்டம் இருக்கிறது அல்லது ஒருவருக்கு எம பயம் இருக்கிறது என்றால் அந்த பயம் நீங்குவதற்கும் மரண கண்டத்தில் இருந்து தப்பிப்பதற்கு வழிபாடு செய்ய வேண்டிய திருக்கோயில் இதுவாகும்.

கும்பகோணம் காரைக்கால் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநீலகண்டராய சிவபெருமான் ஆலயத்தில் அருளும் திருநீலக் குடியாகும். மூலவருக்கு செய்யப்படும் தைலா அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் என்ன சிறப்பு என்றால் எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் அவ்வளவும் பாண த்திற்குள் சென்று விடும்.

மேலும், ராகு தோஷம் உள்ளவர்கள் அந்த தோஷம் விலக உளுந்து, நீலவஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திர போன்றவற்றை இந்த தலத்தில் தானம் செய்தால் நல்ல பலன்கள் உண்டு. யம மற்றும் மரண பயங்கள் நீங்க இந்த தல இறைவனை வழிபாடு செய்து பின்னர் எருமை, நீலத்துணிகள் எள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US