ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் குடிசையில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆவார்களாம்

By Sakthi Raj Apr 05, 2026 01:00 PM GMT
Report

மனிதர்களுடைய வாழ்க்கையில் பணம் தேவை என்றாலும் நாம் தேவைகளை கடந்து பலருக்கும் ஏக்கம் இருக்கும். அதாவது, திடீர் ஒரு அதிர்ஷ்டத்தினால் அல்லது ஒரு நாள் இரவில் வாழ்க்கையில் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து மிகப்பெரிய செல்வந்தராக மாறிவிட மாட்டோமா என்கின்ற கனவுகள் பலருக்கும் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் ஒருவர் கடினமான உழைப்புகள் கொடுத்து, அவர்களுடைய கர்மவினைகள் சரியாக இருந்து, ஜாதக அமைப்பு அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நிச்சயம் அந்த நபர் ஒரு நாள் மிகப்பெரிய அளவில் செல்வந்தராக மாறுவார்.

ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் குடிசையில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆவார்களாம் | Who Will Become A Poor To Rich According Horoscope

இந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆண்டியும் குபேரன் ஆகலாம்

இந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆண்டியும் குபேரன் ஆகலாம்

 

அப்படியாக ஜாதக அமைப்பு படி எந்த நபர் குடிசையில் பிறந்தாலும் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வரராக மாறக்கூடிய யோகம் பெற்று இருப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

ஒரு சில வீடுகளில் பார்த்திருப்போம். தந்தை கூலி தொழிலாளியாக இருந்திருப்பார் ஆனால் மகன் மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்து ஒரு பெரிய நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பார்.

இந்த அமைப்பு பெற வேண்டும் என்றால் ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்க வேண்டும் அல்லது ஆட்சி உச்சம் பெற்று இருக்கக்கூடிய கிரகங்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.

இந்த ராசிகளுக்கு தான் அதிக அளவில் எதிரிகள் இருப்பார்களாம்.. ஏன் தெரியுமா?

இந்த ராசிகளுக்கு தான் அதிக அளவில் எதிரிகள் இருப்பார்களாம்.. ஏன் தெரியுமா?

அதேபோல் ஜாதகத்தில் பாவ கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றிருக்கலாம் ஆனால் லக்னாதிபதி பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருக்க கூடாது. இவ்வாறு ஒரு அமைப்பு இருந்தால் கட்டாயமாக அந்த நபர் குடிசையில் இருந்தாலும் முக்கிய அளவில் செல்வந்தராக மாறக்கூடிய அமைப்பை அவருடைய ஜாதகம் கொடுத்து விடும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US