நாளைய ராசிபலன் (06-04-2026)
மேஷம்:
புதிய நபர்களிடம் தேவை இல்லாத வாக்குவாதங்களை செய்யாதீர்கள். இன்று தற்பெருமையை குறைத்துக் கொள்வது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக எதையும் கையாள வேண்டும்.
ரிஷபம்:
இன்று சுப காரிய பேச்சுக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். அதிகாரிகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்:
வழக்கு தொடர்பான விஷயங்களைப் பற்றி முக்கிய நபரிடம் ஆலோசனை செய்வீர்கள். தாய்மாமன் வழியே உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.
கடகம்:
இன்று புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் வரும். பூர்விக இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கான சிந்தனை தோன்றும்.
சிம்மம்:
உணவு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று முக்கிய வாடிக்கையாளரால் நல்ல லாபம் உண்டாகும். வண்டி வாகனத்தை சரி செய்வீர்கள். நட்பு வட்டாரங்களை அனுசரித்து செல்வது அவசியம்.
கன்னி:
இன்று உங்களுடைய பேச்சு திறமையால் மிகப் பெரிய அளவில் சாதனை செய்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் வைத்துக் கொள்ளாதீர்கள்.
துலாம்:
இன்று உங்களுடைய விவாதங்கள் வழியாக உங்களுக்கு சாதகமான பலனை பெற்றுக் கொள்வீர்கள். புதிய நபர்களில் அறிமுகம் கிடைக்கும். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.
விருச்சிகம்:
இன்று சக ஊழியர்களை நீங்கள் அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். வாகனம் மற்றும் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவைக்கேற்ப வரவுகளை பெறுவீர்கள்.
தனுசு:
இன்று நினைத்த சில பணிகள் செய்வதில் தாமதம் உண்டாகலாம். ஒருவரிடம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எதையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்:
இன்று வரவுகளால் உங்களுடைய சேமிப்பு அதிகமாகும. ஒவ்வொரு விஷயங்களையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகுவீர்கள். உடல் சோர்வு உண்டாகும்.
கும்பம்:
உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புகழ் பெறும் நாள்.
மீனம்:
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று சவாலான பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும். பிள்ளைகளை பற்றி புரிந்து கொள்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |