தீய சக்திகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலக செய்ய வேண்டிய வழிபாடு

By Sakthi Raj Apr 05, 2026 06:05 AM GMT
Report

நம்முடைய வீடுகளில் சில நேரம் திடீரென்று எதிர்மறையான தாக்கங்கள் சூழ்ந்து நல்ல அதிர்வலைகள் குறைந்தும் காணப்படும். அதற்கு பெரும்பாலும் ஜாதகத்தில் நடக்கக்கூடிய கெடு பலன்கள் காரணம் என்றாலும் சில நேரங்களில் தீய சக்திகளின் தாக்கம் அல்லது கண் திருஷ்டி போன்றவையால் வரக்கூடியதாகவும் இருக்கிறது.

அதனால் தான் பெரியவர்கள் ஒருவர் வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு திருஷ்டி கழித்து போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

மேலும் ஒரு சிலருக்கு இருட்டான இடத்திற்கு சென்றாலோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் பயந்துவிட்டாலும் அவர்களுக்கு கெட்ட கனவுகள் உறக்கத்தில் யாரும் அழுவது அல்லது அமுக்குவது போல் தோன்றும்.

ஆக இவ்வாறான சூழ்நிலை இருக்கும் பொழுது நிச்சயமாக நாம் மன அமைதியோடும் நிம்மதியோடும் இருக்க முடியாது. இதிலிருந்து வெளிவருவதற்கு நாம் கட்டாயம் இறைவழிபாட்டை நாடுவது அவசியமாக இருக்கிறது. அப்படியாக தீய சக்திகளை அடியோடு விரட்ட கூடிய அனுமன் மந்திரத்தை பற்றி பார்ப்போம்.

தீய சக்திகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலக செய்ய வேண்டிய வழிபாடு | Hanuman Mantras To Stay Away From Negative Energy

பலரும் அறிந்திடாத திருவண்ணாமலையில் இருக்கும் 5 ரகசிய குகைகள்

பலரும் அறிந்திடாத திருவண்ணாமலையில் இருக்கும் 5 ரகசிய குகைகள்

மந்திரம்:

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ
பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா.

[H4G0REP

பொதுவாகவே, அனுமன் நமக்கு மன வலிமையும் உடல் வலிமையும் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். எதையும் கடந்து செல்லக்கூடிய ஆற்றலை அவர் நமக்கு வழங்குகிறார்.

அந்த வகையில் ஒருவர் மன தைரியத்தை பெறவும் தீய சக்திகளிடமிருந்து விலகவும் திருஷ்டி போன்ற சூழ்நிலைகளிலிருந்து மீண்டு வரவும் இவர்கள் இந்த ஹனுமன் மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பாராயணம் செய்து வரும் பொழுது அவர்களை சுற்றி ஒரு நல்ல சக்தி வளையம் உருவாகி தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US