ஜோதிடத்தில் யாருக்கு மிகவும் அன்பான மனைவி அமையும் என்று தெரியுமா?
ஜோதிடம் என்பது நம்முடைய எதிர்காலத்தை மற்றும் நம்மை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருக்க கூடிய ஒரு கருவியாகும். அதாவது சில நேரங்களில் நம்முடைய ஜாதகத்தை வைத்து நமக்கு எது சரி தவறு என்று தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு நல்ல மாறுதல்களை பெறலாம்.
அந்த வகையில் ஜோதிடத்தில் யாருக்கு அன்பான மற்றும் அதிர்ஷ்டம் தேடி கொடுக்கக்கூடிய மனைவி கிடைப்பார்கள் என்று பார்ப்போம்.

இந்த உலகத்தில் எல்லோருக்குமே கட்டாயம் நல்ல அன்பான வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று தான் விருப்பம். ஆனால் வாழ்க்கை துணை என்பது நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப தான் அமைகிறது.
அப்படியாக, ஆண் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தாலும் அல்லது குருவின் வீட்டிற்கு அடுத்த சுக்கிரன் இருந்தாலும் அல்லது குருவிற்கு ஐந்து அல்லது ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் இருந்தாலும் அந்த ஜாதகரின் மனைவி அவர்கள் மீது அதிக அளவில் காதல் கொண்டு இருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் கணவனை ஒரு நிமிடம் கூட பிரிந்து செல்லாத ஒரு அன்பான மனைவி இவர்களுக்கு கிடைப்பார்கள். சில நேரங்களில் அந்த காதலே அந்த ஜாதகருக்கு மிகப்பெரிய தொல்லையாக அமைந்துவிடும்.
அதனால் அவர்களுடைய மனைவியை அவ்வப்போது அனுசரித்து செல்வது தான் சிறந்தது. இந்த ஜாதக அமைப்பை கொண்டவர்களுக்கு அவர்களுடைய மனைவி அன்பினால் அவர்களை பிழிந்து எடுத்து விடுவார்கள் என்றே சொல்லலாம்.
ஒரு பக்கம் ஆண்களுக்கு நமக்கு மிகச்சிறந்த மனைவி கிடைத்திருக்கிறாள் என்ற பெருமையும் சந்தோஷமும் இருந்தாலும் மறுபக்கம் அந்த ஜாதகரின் மனைவியின் அதீத அன்பு அவர்களுக்கு தொந்தரவாகவும் அமையக்கூடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |