நாளைய ராசி பலன் (05-04-2026)
மேஷம்:
இன்று உங்கள் மனதில் தேவை இல்லாத சிந்தனைகள் வந்து செல்லும். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பிள்ளைகள் கல்வியில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
இன்று திருமணம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தாய் உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் உண்டாகும்.
கடகம்:
இன்று உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து விடுங்கள். எதிரிகளிடம் தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
சிம்மம்:
வியாபார தொடர்பாக நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். காவல் பணியில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமைய போகிறது.
கன்னி:
இன்று நீங்கள் எதையும் சுயமாக சிந்தித்து முடிவு எடுத்தால் மட்டுமே நன்மை உண்டாகும். உணவு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். தேவை இல்லாமல் ஒரு சிலர் உங்கள் மீது விமர்சனம் வைக்கலாம். சுற்றி உள்ளவர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளும் நாள்.
விருச்சிகம்:
இன்று ஒரு சிலருக்கு குடும்பத்தினர் உடன் மன கசப்புகள் வரலாம். அலுவலகத்தில் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
தனுசு:
எதிரிகளால் சில மனக்கசப்புகள் வரலாம். பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்கள் மத்தியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.
மகரம்:
நண்பர்களிடம் தேவை இல்லாத வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள். பொழுது போக்கு விஷயங்களில் சிலருக்கு அதிக ஆர்வம் உண்டாக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாள்.
கும்பம்:
சிலருக்கு மருத்துவ ரீதியாக சில முக்கிய செலவுகள் வரலாம். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். வாழ்க்கை துணையிடம் தேவை இல்ல வாக்கு வாதம் செய்யாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்:
குடும்பத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் நாள். சொந்தங்களிடம் நீங்கள் வீட்டுக் கொடுத்து செல்வது அவசியம். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |