ஜாதகத்தில் குரு பார்வை யாருக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் ?
ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக இருக்கிறார். இவர் ஒரு இடத்தை பார்க்கும் பொழுது அங்கு எவ்வளவு பெரிய பாவ கிரகங்களாக இருந்தாலும் அவை செயல் இழந்து போகக்கூடியதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு குருபகவான் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய உச்ச வீடான கடக ராசிக்கு இடம் மாறி இருக்கிறார்.
குரு பகவான் கடக ராசியில் இருந்து 5, 7, 9 ஆகிய பார்வைகளால் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய வீடுகளை பார்க்கின்ற பொழுது அந்த வீடுகளில் இருக்கக்கூடிய கிரகங்களில் அடிப்படையில் ஜாதகருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
குரு பகவான் சூரியனை பார்க்கின்ற பொழுது அவர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் தொடர்பான தடைகள் யாவும் விலகி நல்ல பலன்களை பெறுவார்கள்.
அதுவே குரு சந்திரனை பார்க்கின்ற பொழுது மனக்குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். விவசாயம் சார்ந்த முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள். தாயாருடன் நல்ல உறவு உருவாகும். குருபகவான் செவ்வாயை பார்க்கின்ற பொழுது நிலம் மற்றும் சொத்து சார்ந்த விஷயங்களில் இருந்து பிரச்சனைகள் விலகும்.
எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். அதுவே குரு பகவான் புதனை பார்க்கின்ற பொழுது கல்வி மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்களில் இருந்த குழப்பங்கள் விலகி வெற்றிகள் கிடைக்கும். ஆவணங்கள் தொடர்பாக சந்தித்து வந்த சட்ட சிக்கல்கள் நீங்கும். குருபகவான் குருவை பார்க்கின்ற பொழுது ஒருவருடைய ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்கான சிறந்த காலமாக அமையும்.
குரு பகவான் சுக்கிரனை பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய அளவில் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெறுவார்கள். குரு பகவான் சனி பகவானை பார்க்கின்ற பொழுது வேலையில் முன்னேற்றம் வளர்ச்சி கிடைக்கும்.
ஆக, குருவின் பார்வை ஒருவர் பல்வேறு மாற்றங்களை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும், குருபகவான் உடைய யோகத்தால் யார் கோடீஸ்வர யோகம் பெறுவார்கள் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |