இந்த ராசியினருக்கு முதல் காதல் தோல்வியில் தான் முடியுமாம்- யார் தெரியுமா?
ஒரு மனிதனுக்கு காதல் மிகவும் அவசியம். அப்படியாக ஒரு சிலருக்கு முதல் காதல் வெற்றியில் முடிந்துவிடும். ஆனால் ஒரு சிலருக்கு முதல் காதல் தோல்வியில் முடிந்து பிறகு ஒரு காதல் மலர்ந்து அந்த காதல் வெற்றி அடையும். இதற்கு அவர்களுடைய ஜாதக அமைப்பு தான் முக்கிய காரணமாக உள்ளது. அந்த வகையில் யாருக்கு காதல் ஒன்றுக்கு மேல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். மேலும் மிதுன ராசியினர் மனதில் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் தங்களுக்கு எது சரி? எது தவறு என்று முடிவு எடுப்பதில் நிறைய சிரமங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இவர்களுடைய குழப்பமே இவர்களுடைய முதல் காதல் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் முதல் காதல் தோல்வியில் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து இவர்கள் இரண்டாவது காதலை மிக அருமையாக அமைத்துக் கொண்டு அதை வெற்றி பெற செய்து விடுகிறார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருடைய அதிபதியும் புதன் பகவான் தான். இருப்பினும் கன்னி ராசியினருக்கு எப்பொழுதுமே வாழ்க்கையில் எதை எடுத்துக் கொண்டாலும் முதலில் ஒரு பாடத்தை அவர்கள் கற்றுக் கொண்ட பின்பே அவர்களுக்கு அந்த விஷயத்தை தங்கள் வாழ்க்கையில் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு நிலையை கிடைக்கும். ஆக கன்னி ராசியினருக்கு காதல் தோல்வி என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். இவர்கள் காதல் தோல்விக்கு அவ்வளவு மனம் வருந்தி இருக்கக்கூடிய நபர்களும் அல்ல. ஒரு காதல் தோல்வி நடந்தால் மீண்டும் ஒரு காதல் மலரும் என்று இவர்கள் முன்னோக்கி செல்ல கூடியவர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவான் ஒருவருடைய வீரம் வலிமை முடிவெடுக்கக்கூடிய திறன் போன்ற எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறார். விருச்சிக ராசியை பொறுத்தவரை இவர்கள் சட்டு என்று உணர்ச்சி வசப்படக்கூடிய நபராக இருப்பார்கள். ஆதலால் இவர்களுக்கு காதலில் ஒரு சில அனுபவங்களைப் பெற்று பிறகு தான் நிலைத்தன்மையை பெறக்கூடிய அம்சம் பெற்றிருக்கிறார்கள். அதாவது முதல் காதல் வழியாக இவர்கள் பெறுகின்ற அனுபவத்தை கொண்டுதான் இவர்கள் காதல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று உணர்ந்து பிறகு ஒரு காதலில் விழுந்து அதை இவர்கள் வெற்றிகரமாக மாற்றுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |