இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை அமோகமாக மாறுமாம்
நம்முடைய வாழ்க்கை எப்பொழுது எந்த நேரங்களில் திருப்பும் அடையும் என்று தெரியாது. ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
ஒரு சிலருக்கு குழந்தை பிறந்து பிறகு வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். இதற்கெல்லாம் ஜோதிட ரீதியாக கிரகங்களினுடைய அமைப்பு என்று சொல்வது உண்டு.
அந்த வகையில், ஜாதக ரீதியாக யாருக்கு திருமணத்திற்கு பிறகு கொடிகட்டி பறக்கக்கூடிய வாழ்க்கை இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம். ஜோதிடத்தில் ஏழாம் இடம் என்பதுதான் திருமணத்தை குறிக்கக்கூடிய இடம்.

ஆக, ஜாதகத்தில் ஏழாம் வீடு அவர்களுடைய மனைவியையோ கணவனையோ புரிந்து கொள்ளக்கூடிய இடம். இந்த ஏழாம் வீட்டின் அதிபதி ஒருவருடைய ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10 ஆகிய இடத்தில் இருக்கின்ற பொழுது இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் முன்னேற்றமடையும்.
மேலும், ஏழாம் வீட்டினுடைய அதிபதி 3,9,11 ஆகிய இடங்களில் இருந்தாலும் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் ஏழாம் வீட்டில் அதிபதி 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு ஸ்தானங்களில் இருந்தால் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை சற்று கசப்பானதாக மாற வாய்ப்புள்ளது.

மேலும், சுக்கிரன் மற்றும் குரு தொடர்பு இருந்தாலும் அவர்களுக்கு மிகச்சிறந்த பலன் இருக்கும். சனி அல்லது செவ்வாய் தொடர்பு இருந்தால் ஆரோக்கியத்தை சில சிக்கல்கள் வரலாம். ராகு பணவரவை அதிகரிக்கும்.
கேது அவமானங்களை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிலும் குறிப்பாக ராசி என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது சிம்மம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களும் திருத்தங்களும் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |