இவர்களால் இனி இந்த 47 கோவிலுக்கு செல்ல முடியாது.. ஏன் தெரியுமா?
உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் கேதாரநாத் உட்பட 47 கோவில்களுக்குள் சனாதான தர்மத்தை பின்பற்றாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரை அடுத்த மாதம் 19 ஆம் தேதி அன்று துவங்க இருக்கிறது.
இது தொடர்பாக பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில் குழும தலைவர் ஹேமந்த் திவேதி அவர்கள் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்பொழுது சனாதான தர்மத்தை பின்பற்றாதவர்கள் மற்றும் அதன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஒருபொழுதும் பத்ரிநாத் கேதர்நாத் உட்பட சுமார் 47 கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக பத்ரிநாத் மற்றும் கேந்திரநாத் கோயில் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதே போல் முன்னதாக ஹரிதுவாரில் உள்ள கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் கோவில் நிர்வாகங்கள் மற்றும் மத அமைப்புகளின் கருத்துக்களை உத்தரகாண்ட் அரசு ஏற்கும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |