கருட புராணம்: இறந்தவர்கள் வாயில் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் தெரியுமா?

By Sakthi Raj Apr 22, 2026 06:57 AM GMT
Report

இந்த பூமியில் எல்லா உயிர்களுக்கும் இறுதி நாள் என்று ஒன்று உண்டு. அதுதான் அவர்களுடைய மரணம். அதாவது பிறந்த எந்த ஒரு உயிராக இருந்தாலும் கட்டாயம் ஒரு நாள் இறந்தாக வேண்டும் என்பதுதான் விதி. இதற்கிடையில் தான் நம்முடைய வாழ்க்கை அடங்கி இருக்கிறது. மேலும், மரணம் தான் இந்த உலகத்தின் உண்மையை உணர்த்தக்கூடிய நாளாகவும் இருக்கிறது.

அப்படியாக ஒருவர் இறந்த பிறகு அவர்களுக்கு செய்யக்கூடிய சடங்குகளுக்கும் நடைமுறைகளுக்கு பின்னாலும் ஒரு சில முக்கியமான காரணங்கள் இருக்கிறது. சில நேரங்களில் அதற்கு பின்னால் அறிவியல் ரீதியாக சில முக்கியமான விஷயங்கள் அடங்கி இருப்பதையும் நாம் பார்க்கலாம்.

அப்படியாக, ஒருவர் இறந்த பிறகு அவர்களுக்கு நடக்கக்கூடிய சடங்கின் பொழுது வாயில் வெற்றிலை பாக்கு இடித்து வைப்பது உண்டு. இதற்கு பின்னால் இருக்கக்கூடிய புராணமும் முழு காரணங்களை பற்றியும் பார்ப்போம்.

கருட புராணம்: இறந்தவர்கள் வாயில் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் தெரியுமா? | Why Betel Leaves Kept In Dead Persons Mouth

பாம்பிற்கு நாக்கு ஏன் இரண்டாகப் பிளந்து இருக்கிறது? வியப்பூட்டும் புராணக்கதை

பாம்பிற்கு நாக்கு ஏன் இரண்டாகப் பிளந்து இருக்கிறது? வியப்பூட்டும் புராணக்கதை

குறிப்பாக இறந்தவர்களுக்கு வாயில் வெற்றிலை பாக்கு இடித்து வைப்பது என்பது நம்முடைய இந்து மதத்தில் மட்டுமே பின்பற்றக்கூடிய முக்கியமான நடைமுறை வழக்கம். இந்த நடைமுறையை பாரம்பரியமாக நாம் தொடர்ந்து பின்பற்றி வருவதால் பலருக்கும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்கள் தெரிவதில்லை.

அதை பற்றி கருட புராணத்தில் சில விஷயங்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

இந்து மத சாஸ்திரத்தில் கருட புராணம் என்பது விஷ்ணு பகவானுக்கும் கருடருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஆகும். இந்த உரையாடல் மனிதர்களை வாழ்க்கையில் சரியாக வழிநடத்திச் செல்லக் கூடியதாக மற்றும் இந்து மத சாஸ்திரத்தை புரிந்து கொள்ளக்கூடியதாகவும் அமைகிறது.

கருட புராணம்: இறந்தவர்கள் வாயில் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் தெரியுமா? | Why Betel Leaves Kept In Dead Persons Mouth

2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

அப்படியாக, இறந்தவர்களின் இறுதி பயணத்தின் பொழுது அவர்கள் வாயில் வெற்றிலை பாக்கு வைப்பது என்பது பசி தாகமின்றி சுமூகமாக ஆன்மா பிரிய வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய ஒரு பாரம்பரிய சடங்காகும்.

இறந்தவர் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் அவருக்கு பசி, தாகம் எடுக்க கூடும் என்ற நம்பிக்கையில் வெற்றிலை பாக்கு மற்றும் அரிசி வாயில் வைக்கப்படுகிறது.

மேலும், இறந்த பிறகு அவர்களுடைய தசைகள் தளர்ந்து வாய் திறக்கப்படும். அதை மூடி வைப்பதற்காகவும் வெற்றிலை பாக்கு கசக்கி வாயில் வைக்கப்பட்டு துணியால் கட்டப்படுவது வழக்கம். இவ்வாறு செய்யும் பொழுது அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையவும் அவர்கள் அடுத்த உலகத்திற்கு செல்லவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US