கிருஷ்ண ஜெயந்தி: வீட்டில் கிருஷ்ணரின் பாதம் வரைந்து வழிபடுவது ஏன் தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரே நம்முடைய வீட்டிற்கு வருவார் என நம்பப்படுகிறது.
அந்த நன்னாளில் திருமணமான தம்பதியினர் இருக்கும் விரதத்தின் பலனாக அவர்களுக்கு கிருஷ்ணரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம்.
அந்தவகையில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் சீக்கிரமாக எழுந்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள கிருஷ்ணர் உருவ சிலை அல்லது கிருஷ்ணர் படத்தை துடைத்து பூக்களால் அலங்காரம் செய்யுங்கள்.
பின் அரிசி மாவு கொண்டு கோலமிடுங்கள். வாசலில் மாவிலையால் தோரணங்கள் கட்டி மங்களகரமாக அலங்கரிக்க வேண்டும்.
கிருஷ்ணனுக்கு விருப்பமான வெண்ணெய், சர்க்கரை, அவல், அதிரசம், முறுக்கு, இனிப்பு சீடைகள் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
பிறகு அரிசிமாவை வைத்து குழந்தையின் காலடி தடங்களை வீட்டு வாசலில் தொடங்கி பூஜையறை வரையிலும் அச்சாக பதிக்க வேண்டும்.
எந்த வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து வழிபாடு செய்கிறார்களோ அங்கு கிருஷ்ணர் எல்லா நன்மைகளையும் அருள்வார் என்பது ஐதீகம்.
குறிப்பாக, குழந்தை வரம் வேண்டுவோர் கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் பங்கேற்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |