கோயில் நிலைப்படியை மிதிக்காமல் ஏன் தாண்டி செல்கிறோம் தெரியுமா?

By Yashini May 01, 2024 12:26 AM GMT
Report

அனைவரும் சாமி தரிசனத்திற்க்காகவும், மன அமைதிக்காகவும் கோவில் சென்று கடவுளை வழிபாட்டு வருகிறோம்.

நம்மில் பலரும் கோவிலுக்கு உள்ளே நுழைவாயிலின் முதல் படிகட்டில் கால் வைக்காமல் அதை தாண்டி செல்வர்.

அது எவ்வளவு பெரிய படிகட்டாக இருப்பினும் அதை தாண்டியே செல்வர். அது ஏன் என்று தெரியுமா?

முதலில் கோயிலில் உள்ள குழாயில் பாதங்களை நனைத்த பின்னர் தலையில் தண்ணீரை தெளித்து கொள்ள வேண்டும். அது நம்மை சுத்தம் செய்வதாக அடையாளம்.  

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் ஏன் தாண்டி செல்கிறோம் தெரியுமா? | Why Do We Cross The Temple Steps Without Stepping  

பின்னர் கோயிலின் கோபுரத்தையும் கோபுர கலசத்தையும் வணங்கிய பின்னர் துவார பாலகர்களை வழிபட வேண்டும்.

சாஸ்திரத்தின் படி நுழைவாயிலின் உள்ள படிக்கட்டு எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதை தாண்டியே செல்ல வேண்டும் எனக் கூறுகிறது.

அவ்வாறு நாம் செல்லும் போது நம்முடைய எதிர்மறை எண்ணங்களை வாயில் படிகட்டிலேயே விட்டு செல்வதாக அர்த்தம் எனவும் சாஸ்திரம் கூறுகிறது.

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் ஏன் தாண்டி செல்கிறோம் தெரியுமா? | Why Do We Cross The Temple Steps Without Stepping  

கோயிலின் உள்ளே நாள் முழுவதும் மந்திரங்கள் ஓதப்பட்டு, மங்களகரமான இசைகளால் நேர்மறையான அதிர்வுகள் நிரம்பி இருக்கும்.

அத்தகைய இடத்திற்குள் செல்லும் போது நேர்மறையான எண்ணங்களுடன் செல்ல வேண்டும் என்று படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.

ஒருவேளை நாம் படிகட்டில் கால் வைத்து உள்ளே செல்லும் போது எதிர்மறை எண்ணங்களை நாம் சுமந்து கொண்டு செல்வதாக அர்த்தம். 

எனவே, இனிமேல் கோயில் செல்லும் போது படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US