இந்த 5 பொருட்கள் தானம் செய்தால் எவ்வளவு பெரிய கஷ்டமும் பறந்து விடுமாம்
இந்த உலகத்தில் நாம் எடுத்திருக்க கூடிய இந்த பிறவி முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்ப நடக்கிறது. அப்படியாக, நாம் முன் ஜென்மத்தில் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் இந்த பிறவியில் தான தர்மம் செய்து நல்ல சிந்தனைகளோடும் செயலோடு வாழ்ந்து விட்டால் எப்பேர்பட்ட துன்பத்திலிருந்தும் நம்மை காப்பதற்கு நம்முடைய புண்ணியம் கவசமாக அமையும்.
அதனால் தான் "நம்முடைய முன்னோர்கள் தானமும் தர்மமும் நம் தலையை காக்கும்" என்று சொல்லி இருக்கிறார்கள். சில நேரங்களில் தானம் செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் விலகுகிறது. அதிலும், குறிப்பாக ஜோதிட ரீதியாக குறிப்பிட்ட சில ஐந்து விஷயங்களை தானம் கொடுத்தால் நாம் கிரக தோஷங்களிலிருந்து விடுபடுவோம் என்று சொல்கிறார்கள்.
அதாவது பச்சரிசி, வெல்லம், நல்லெண்ணெய், துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவை தானம் கொடுக்கும் பொழுது நாம் எப்பொழுது பெரிய கஷ்டங்களில் இருந்தாலும் அதிலிருந்து நாம் விடுபடலாம். மேலும், இந்த ஐந்து பொருட்களையும் நாம் வசதிக்கு ஏற்ப நாம் மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம்.

சிலருக்கு நானே துன்பத்தில் இருக்கின்றேன் இதில் நான் யாருக்கு எப்படி உதவி செய்வது என்று மனதில் சிந்தனை எழும். அந்த நேரத்தில் நாம் எந்த அளவிற்கு ஒருவருக்கு உதவியை செய்ய முடியுமோ அந்த உதவியை செய்யுங்கள். அது பொருள் உதவியாக மட்டுமல்லாமல் நீங்கள் ஒருவருக்கு ஒரு ஆறுதலாக இருக்கக்கூடியதும் ஒரு பெரிய தானமாக அமையும்.
அப்படியாக, தானம் கொடுக்க வேண்டும் என்றால் நாம் பிறருடைய தேவை அறிந்து கொடுக்கலாம். மேலும் மேற்கண்ட 5 பொருட்கள் தானம் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று சிந்தனை தோன்றும். பொதுவாக, ஜோதிடத்தில் பச்சரிசி சந்திரனுக்கு உரிய பொருளாக இருக்கிறது.
இந்த பொருளை நாம் தானம் வழங்கும் பொழுது நம்முடைய மனதில் உள்ள குழப்பங்கள் விலகி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது. அதைப்போல், வெல்லம் சுக்கிரனுக்கு உரிய பொருளாக இருக்கிறது. இந்த இனிப்பு சார்ந்த பொருட்களை தானம் கொடுக்கும் பொழுது மகாலட்சுமியின் அருளை நாம் பெற்று பொன் பொருள் சேர்க்கை கிடைக்கிறது.

மேலும், எண்ணெய் என்றாலே அது சனி பகவானுக்கு உரியது என்று நாம் எல்லோரும் அறிந்தது. ஆகையால் எண்ணெய் தானம் செய்யும் பொழுது நமக்கு வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்னல்களில் இருந்து விடுபட உதவியாக இருக்கிறது. துவரம் பருப்பு செவ்வாய் பகவானுக்கு உரியதாக உள்ளது. செவ்வாய் என்பது ஒட்டுமொத்த நிலம், வீட்டையும் குறிக்கிறது.
அதனால் இதை நாம் தானம் செய்யும் பொழுது வீடு தொடர்பான எந்த பிரச்சினைகளில் இருந்தாலும் அதிலிருந்து நாம் விடுபடலாம். அடுத்ததாக, தேங்காய் தானம் செய்யும் பொழுது தேங்காய் மரமான தென்னை மரம்போல் நம்முடைய வாழ்க்கையில் வளமாகவும் உயர்ந்த இடத்தையும் நாம் பிடிப்பதற்கான அருள் கிடைக்கிறது.
இது ஜோதிட ரீதியாக ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ஐந்து பொருட்களுமே உணவு பொருட்கள். இதை நாம் இயலாதவர்களுக்கு தானம் வழங்கும்பொழுது அவர்களுடைய பசி ஆறும் அந்தமன நிறைவே நம்முடைய கஷ்டங்களில் இருந்து நம்மை காத்து நம்மை வாழ வைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |