உலகின் சபிக்கப்பட்ட நதி எது தெரியுமா? இதை யாரும் பயன்படுத்த மாட்டார்களாம்
நம்முடைய இந்தியாவில் நதிகளை நாம் புனிதமாக போற்றி வழிபாடு செய்கின்றோம். மேலும் ஆறுகளை நாம் தெய்வங்களாகவே போற்றி வழிபாடு செய்கின்றோம். அதிலும் இந்தியாவில் மிகவும் புனிதமான நதியாக கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகள் இருக்கிறது. இங்கு பல பக்தர்கள் சென்று வழிபாடு செய்து அவர்களுடைய பாவங்களை கரைத்துக் கொள்கிறார்கள்.
மேலும் புனித நதிகளில் நீராடுவது நமக்கு பெரும் புண்ணியத்தை சேர்க்கும் என்று இந்து மதத்தில் தீராத நம்பிக்கையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதம் போன்ற புனித நாட்களில் புனித நதிகளில் நீராடுவது என்பது மிகப் புண்ணியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இவ்வாறு நாம் ஒரு பக்கம் நதிகளை போற்றி வழிபாடு செய்து கொண்டிருக்க, ஒரே ஒரு நதியில் மட்டும் மக்கள் குளிப்பதற்கும் ஏன் அவர்களுடைய கால் வைப்பதற்கு கூட பயப்படுகிறார்கள். இந்த நதியில் குளிப்பவர்கள் அல்லது நதியை பயன்படுத்துவர்கள் தொடர்ந்து சிக்கல்களில் சிக்குவதாக மக்கள் தலைமுறை தலைமுறையாக நம்பி வருகிறார்கள்.

இந்தியாவில் அசுத்தமான நதி என்று சொல்லப்படும் கர்மனாசா நதி தான் சபிக்கப்பட்ட நதியாக அப்பகுதி மக்களால் கருதப்படுகிறது. இதில் கர்மனாசா என்ற பெயருக்கு கர்மங்களை அழிக்கக்கூடியது என்று அர்த்தம். இதில் யார் குளிக்கிறார்களோ அவர்கள் அனைத்து நற்பண்புகளும் புண்ணியங்களும் அழிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
ஆதலால் இந்த நதியில் குளிப்பது, விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு கூட மக்கள் உபயோகிப்பது இல்லை என்று சொல்கிறார்கள். மேலும், நதியின் அருகே வசிக்கும் மக்கள் இது ஒரு சபிக்கப்பட்ட நதியாக கருதுகிறார்கள். கர்மனாசா நதி உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் இடையே எல்லையை உருவாக்குகிறது.
இந்த நதி கைமூர் மலைகளின் அதௌரா பகுதியில் உருவாகி பக்ஸரில் கங்கையுடன் இணைகிறது. 192 கி.மீ நீளமுள்ள இந்த நதி அதன் மேற்குக் கரையில் உத்தரப்பிரதேச மாவட்டங்களாலும், கிழக்குக் கரையில் பீகார் மாவட்டங்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நதிகளை மக்கள் எந்த ஒரு பூஜைக்கும் பயன்படுத்துவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஏன் சத் பூஜையின் பொழுது கூட மக்கள் கங்கையை அருகே வழிபடுகிறார்கள், ஆனால் கர்மனாசக் கரையில் எந்த ஒரு காரியமும் அவர்கள் செய்வதில்லை. காரணம் இந்த நதி மிகப் பெரிய அளவில் சாபம் பெற்றதாக மக்கள் நம்புகிறார்கள். இதற்கு ஒரு புராணக் கதையும் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதாவது அயோத்தியின் மன்னர் சத்யவ்ரதரும், திரிசங்குவும் தான் இந்த சாபத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. திரிசங்கு என்பவர் அவர் உயிருடன் இருக்கும் பொழுதே சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஆனால் அவரது குரு வசிஷ்ட முனிவர் அவ்வாறு செல்வது என்பது விதிகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அதற்கு தடை மற்றும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இருந்தாலும் திரிசங்கு அவருடைய எண்ணத்தில் இருந்து பின் வாங்கவில்லை. திரிசங்கு வசிஷ்டரின் மகனை பணம் கொண்டு தன்வசம் படுத்த முயற்சி செய்து இருக்கிறார். இதனால் ஆசிரியர் மிகவும் கோபத்திற்கு உள்ளாகி சாபம் கொடுத்திருக்கிறார். எனவே திரிசங்கு காடுகளில் அலைந்து திரிந்து விசுவாமித்திர முனிவரை அடைந்தார்.
ஆனால் விசுவாமித்திரர் வசிஷ்டரின் போட்டியாளர். ஆதலால் திரிசங்கவின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் ஒரு யாகத்தை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இவ்வாறாக யாகமானது செய்து கொண்டிருக்க இந்திரன் பெரும் கோபம் கொண்டு அந்த யாகத்தை நடுவே நிறுத்தி விடுகிறார்.
இந்த மோதலால் திரிசங்கு வானத்திலிருந்து கீழே விழுந்து விடுகிறார். விஸ்வாமித்திரர் திரிசங்குவை வனத்தின் நடுவிலே நிறுத்தி அங்கையே ஒரு சொர்க்கத்தை உருவாக்குகிறார். அது திரிசங்கு சொர்க்கம் என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் திரிசங்குவின் வாயில் இருந்து உமிழ்நீர் தரையில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
புராணங்கள் படி அந்த உமிழ்நீர் தரையில் கலந்து கர்மனாச நதி பிறக்கக் காரணமாக அமைந்தது என்று சொல்கிறர்கள். இதன் காரணமாக தான் அந்த நீர் அசுத்தமானது மற்றும் சாபம் பெற்றது என்று நம்பப்படுகிறது. இதனால் மக்கள் இந்த நீரை புண்ணியத்தை தருவதை காட்டிலும் நமக்கு பாவத்தை சாபத்தையும் தான் கொடுக்கும் என்று பயம் கொள்கிறார்கள்.
இவ்வளவு ஆண்டுகளாகியும் மக்கள் மீண்டும் அந்த நதியின் அருகே செல்வதை விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறாக கங்கை நதி புனிதமானது என்றால் கர்மனாசா நீர் சபிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நதி கங்கையுடன் இணைந்து புனிதமாவது குறிப்பிடப்பட்டது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |