கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடப்பதின் ரகசியம் தெரியுமா?

By Sakthi Raj Jul 26, 2026 12:38 PM GMT
Report

நாம் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவதை பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை பற்றி பார்ப்போம்.

முதல் மூன்று ஆண்டுகள் சுவாமி நமக்கு கருவறையில் இருந்து நமக்கு அருள் பாலிக்கிறார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் பலி பீடத்தில் இருந்து நமக்கு அருள் புரிவதாக சொல்லப்படுகிறது.

அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கொடி மரத்திலிருந்து நமக்கு அருள் புரிவதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கோபுர கலசத்திற்கு செல்வதாக சொல்லப்படுகிறது.

கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடப்பதின் ரகசியம் தெரியுமா? | Why Kumbabishegam Happening In Temple For 12 Years

2026 ஆகஸ்ட் பலன் : பெயர் புகழ் அதிகாரத்தோடு வாழப்போகும் மகர ராசியினர்..

2026 ஆகஸ்ட் பலன் : பெயர் புகழ் அதிகாரத்தோடு வாழப்போகும் மகர ராசியினர்..

கோபுர கலசத்தில் இருக்கக்கூடிய தெய்வத்தை நாம் மீண்டும் கருவறைக்கு அழைத்து வரவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கக்கூடிய இந்த கும்பாபிஷேகங்களில் நாம் கலந்து கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு திருப்பு முனையும் மாறுதலும் நடப்பதை நாம் காணலாம்.

அதிலும் குறிப்பாக நம் வாழ்க்கையில் உள்ள தீய சக்திகள் விலகி ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US