சில சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்காமல் ஏன் வேறு திசையில் அமர்ந்திருக்கிறார்?
சிவாலய வழிபாடுகளில் முதலாவதாக நாம் வழிபாடு செய்வது விநாயக பெருமானை, பிறகு கொடி மரத்திற்கு நாம் வணக்கம் செலுத்திவிட்டு பின்னதாக நந்தி பகவானை வணங்கி அதன் பிறகு சிவபெருமானின் தரிசிப்பது வழக்கம்.
மேலும், பல சிவாலயங்களில் சிவபெருமானை நோக்கிய படியே அமைதியாக நந்தி பகவான் அமர்ந்திருக்கிறார்.
அவர் வெறும் வாகனம் மட்டுமல்ல நந்தி பகவான் சிவபெருமானின் பக்தராகவும், சிவகணங்களின் தலைவராகவும் கயிலாயத்தின் காவலராகவும் புராண மரபுகளில் போற்றப்படுகிறார். தமிழகத்தில் இருக்கக்கூடிய சில சிவாலயங்களில் நந்தி பகவான் வழக்கம் போல் சிவபெருமானை நோக்காமல் வேறு திசையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்.

இதை நாம் பலரும் கவனித்திருப்போமா என்று தெரியாது. ஆனால், அவர் நந்தி பகவான் சிவபெருமான் பார்த்து அல்லாமல் வேறு திசையை நோக்கி அமர்ந்திருப்பதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு திருத்தலத்திற்கு பின்னாலும் ஒரு தனித்துவமான தல புராண மரபு உள்ளது. அந்த வகையில், சிறப்பு வாய்ந்த நந்தி திரு கோலங்களைப் பற்றி பார்ப்போம்.
அதிகார நந்தி:
சிவாலயங்களில் கொடி மரத்திற்கு அருகில் காணக்கூடிய நந்தி பகவான் அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறார். இவரை கைலாயத்தில் சிவபெருமானுக்கு வாயிற் காவலராகவும் இறைவனை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் பொறுப்பு கொண்டுள்ள வரும் என்று புராண மரபு சொல்லுகிறது.
மேலும், நந்தி பகவான் மிகக் கடுமையாக தவம் இருந்து சிவபெருமானிடம் இருந்து அருளை பெற்றதாகவும் சிவ கணங்களில் தலைவராக விளங்கியதாகவும் புராணங்கள் நமக்கு சொல்கிறது.
மால்விடை:
சில சிவாலயங்களில் அதிகார நந்தி பகவானை தொடர்ந்து மற்றொரு நந்தி பகவானை நாம் பார்க்க முடிகிறது. இவர் மால் விடை அல்லது விஷ்ணு நந்தி என்று அழைக்கப்படுகிறார். திரிபுர சம்ஹாரத்தின் பொழுது திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவபெருமானை தாங்கியதாக புராண மரபு சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை:
அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் காணப்படும் நந்திகள் வழக்கமாக கருவறையில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை மட்டும் நோக்காமல் அண்ணாமலையை நோக்கி இப்படி இருப்பதாக தல மரபு சொல்லப்படுகிறது.
அதாவது, திருவண்ணாமலை சிவபெருமானின் அரூபமான ஜோதி வடிவமாகக் கருதப்படுவதால் நந்தி பகவான் மலையை நோக்கி அமர்ந்திருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அதனால் அண்ணாமலையை தரிசிப்பதும் சிவபெருமான் தரிப்பதற்கு சமம் என்ற பக்தி அனுபவமாகவே இது கருதப்படுகிறது.
திருப்புன்கூர்:
நந்தனார் நாயன்மார் பக்தி கதையுடன் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்ட திருத்தலமாக இந்த திருப்புன்கூர் உள்ளது. நந்தனார் சமூக புறக்கணிப்பால் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை இருந்த பொழுது அவர் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானை தரிசிக்க விரும்பியதாக பெரிய புராணம் மரபில் சொல்லப்படுகிறது.
ஆனால், நந்தி சன்னதியில் மறைத்துக் கொண்டிருந்தது நந்தனார் இறைவனை மனம் உருகி இறைவனே சிவபெருமானே உன்னை காண கிடைக்காத காட்சியாக நான் காத்து கிடைக்கின்றேனே என்று வருந்திய பொழுது சிவபெருமானுடைய அருளால் நந்தி பகவான் சற்று விலகி அமர்ந்ததாக தலபுராணம் சொல்கிறது. அதன் மூலம் நந்தனாருக்கு சிவபெருமானின் திருக்காட்சி கிடைத்ததாக பக்தி மரபில் போற்றப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |