நாளைய ராசி பலன் (25-09-2026)
மேஷம்:
இன்று ஒருவரின் பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும்.
ரிஷபம்:
இன்று முக்கியமான ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
மிதுனம்:
உடன் பிறந்தவர்களிடமிருந்து வந்த பிரச்சனைகள் விலகும். ஆன்மீக பணிகளில் நீங்கள் கலந்து கொள்வீர்கள். ஆராய்ச்சி விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும்.
கடகம்:
மனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை வரலாம். செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையாக கையாள்வது அவசியம்.
சிம்மம்:
வேலையில் மதிப்புகள் அதிகரிக்கும். சகோதரர்கள் வழியே உங்களுக்கு ஆதரவான நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே புரிதல் மேம்படும். கடன் பிரச்சினை விலகும்.
கன்னி:
சில வரவுகளால் உங்களுக்கு கையிருப்புகள் அதிகரிக்கும். அரசாங்க சார்ந்த விஷயங்களால் நல்ல அனுகூலம் உண்டு. முயற்சிகள் கைகூடி வரும்.
துலாம்:
கல்வி தொடர்பாக இருந்து வந்த ஆர்வம் இன்று சற்று குறையலாம். கடினமான வேலைகளையும் மிக சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கற்பனை கலந்த விஷயங்களால் சில குழப்பம் வரலாம்.
விருச்சிகம்:
பயணங்கள் வழியாக அலைச்சல் அதிகரிக்கும். மனதில் சோர்வு வந்து நீங்கும். சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு:
பழைய பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு கைக்கூடி வரும்.
மகரம்:
ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய மதிப்புகள் உயரும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.
கும்பம்:
நண்பர்கள் வழியே உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சிறுசிறு விமர்சனங்கள் வந்து விலகும். அரசு காரியங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
மீனம்:
நினைத்த பணிகளில் அலைச்சல் உண்டாகலாம். பழைய கடன் பிரச்சனைகள் விலகும். வாகனத்தில் பொறுமை அவசியம். சகிப்புத்தன்மையுடன் செயல்படுவது முக்கியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |