2026 அக்டோபர் முதல் துர்கா தேவியின் அருளால் வெற்றியின் உச்சம் தொடும் ராசிகள் யார்?

By Sakthi Raj Sep 24, 2026 07:41 AM GMT
Report

 2026 அக்டோபர் மாதம் அருகில் வந்துவிட்டது. அந்த வகையில், நவராத்திரி விழா மிக சிறப்பாக கொண்டாட பக்தர்கள் காத்திருக்கிறார்கள். அதோடு, இந்த மாதத்தில் முக்கியமான கிரகம் மாற்றங்களும் நடக்கிறது.

அந்த வகையில், குரு மங்கள யோகம், பரிவர்த்தனை யோகம், கஜகேசரியும் போன்ற பல சுபமான கிரகங்கள் உருவாகிறது. இந்த மாதம் முழுவதும் அன்னை துர்கா தேவதையின் ஆசிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் விளைவாக சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்.

2026 அக்டோபர் முதல் துர்கா தேவியின் அருளால் வெற்றியின் உச்சம் தொடும் ராசிகள் யார்? | 4 Zodiac Who Gets Luck By Durga Devi In Oct 2026

ஜாதகம் பார்க்கும் பொழுது நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன?

ஜாதகம் பார்க்கும் பொழுது நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன?

 

மேஷம்:

மேஷம் இவர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் முன்னேற்றமான வாய்ப்புகளை கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கிறது. பதவி உயர்வு மற்றும் தொட்ட காரியங்களில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்கள் இவர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் ஆதரவு இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவு கிடைப்பதோடு திறமையும் வெளிப்படும்.

விருச்சிகம்:

இவர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் சாதகமான பலன் கொடுக்கப்போகிறது. வேலை செய்யும் இடங்களில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் வலிமை பிறக்கும். யாரை எப்படி கையாள வேண்டும் என்கின்ற ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்களுடைய குணாதிசயங்கள் இப்படித்தான் இருக்குமாம்

பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்களுடைய குணாதிசயங்கள் இப்படித்தான் இருக்குமாம்

சிம்மம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் நம்பிக்கை பிறக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் லாபம் உண்டாகும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது இந்த காலகட்டம் சிறப்பு பொருளாதார சிக்கலை அடைப்பதற்கான வழி பிறக்கும்.

மீனம்:

இவர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் விலகி மன நிம்மதி கிடைக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார். வீடுகளில் புதிய வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். மனப்பதட்டம் குறைவதோடு செய்யும் காரியங்களில் வெற்றியும் பெறுவீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US