ஜாதகம் பார்க்கும் பொழுது நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன?
சாஸ்திர ரீதியாக நாம் ஒரு விஷயத்தை கடைபிடிக்க துவங்கி விட்டால் நம் வாழ்க்கையில் நம்மை அறிந்தோம் அறிந்தும் அறியாமலும் சாஸ்திரத்தை பின்பற்றக் கூடிய நிலைக்கு வந்து விடுவோம்.
அந்த வகையில், நாம் ஜாதகம் பார்க்கும் போது சில தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் ஜாதகம் முடிந்த வரை வருடத்திற்கு ஒருமுறை நல்ல ஜோதிடரை பார்த்து தெரிந்து கொள்வது நன்மைகள் தரும். அடிக்கடி பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும், பிறந்த குழந்தைகளுக்கு 12 மாதம் முடியாமல் அவர்கள் ஜாதகம் பார்க்க கூடாது.

அதோடு, ஜாதகர் பிறந்த நாளிலும் அவர் பிறந்த திதி வரும் பொழுதும் ஜாதகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை என்று இல்லாத நிலையில் அவர்கள் தேய்பிறையில் ஜாதகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வீடுகளில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளுக்காக ஜாதகம் பார்க்க போகும் பொழுது புதன்கிழமைகள் பார்ப்பது சிறந்தது மற்றும் ஜாதகருக்கு ஜாதகம் பார்க்க போகக்கூடிய நாளில் சந்திராஷ்டம அஷ்டமி, கரிநாள் அமாவாசை பௌர்ணமி நாட்களிலும் ஜாதகம் பார்க்க கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |