அக்னி நட்சத்திரத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.., ஏன் தெரியுமா?
அக்னி நட்சத்திரம் என்பது சூரியன் அதிகளவிலான வெப்பத்தை வெளியிடும் காலம். இது ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் பாதி வரை நீடிக்கிறது.
இந்த அக்னி நட்சத்திரத்தில் தீர்த்த யாத்திரை, ஸ்நானம், திதி காரியங்கள், நன்மை தரும் ஹோமங்கள் போன்றவை செய்து புண்ணியம் பெறலாம்.
வீட்டில் துளசி, சங்கு தாணி, இளநீர், பனங்கிழங்கு, கம்பங்கூழ் போன்றவை இறைவனுக்குப் படைத்து நிவேதனமாக செய்தல் ஆன்மிகத்திலும், ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.
மேலும், இந்த நேரத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் , சீமந்தம், முதலிய சுப நிகழ்வுகள் தவிர்க்கப்படவேண்டும்.
காரணம், வெப்ப சக்தி மிகுந்ததால் இது ஏற்ற நேரம் அல்ல. இந்த காலத்தில் சூரியனை பிரதானமாக வழிபடுவது சிறந்தது.
மேலும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யலாம். கூடுதலாக, அக்னி தேவனுக்கும், விஷ்ணுவுக்கும், மற்றும் வருண தேவனுக்கும் அர்ச்சனை செய்தல் மிக உயர்ந்த பலன்களைத் தரும்.
வீட்டில் பத்மநாப பெருமாள் போன்ற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யலாம். இவை பஞ்சபூதக் கோளாறுகளிலிருந்து காப்பாற்றும் என நம்பப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |