வாஸ்து: வடக்கு திசையில் என்ன பொருட்கள் வைக்கலாம்? வைக்கக்கூடாது?

By Sakthi Raj Mar 22, 2026 04:25 AM GMT
Report

 வாஸ்து சாஸ்திரப்படி நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு சிறப்பை சொல்லியிருக்கிறார்கள். அதில் வடக்கு திசையை அவர்கள் செல்வத்தின் அதிபதியாகவும் அது குபேரருக்கு உரிய திசை ஆகவும் சொல்கிறார்கள்.

இந்த திசையை நாம் சரியான முறையில் வீடுகளில் பயன்படுத்தும் போது வீடுகளில் கடன் தொல்லை, வறுமையில் விலகி செல்வ செழிப்பு உண்டாகுமாம். அப்படியாக வீடுகளில் வடக்கு திசையில் என்ன பொருட்களை வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் என்பதை பார் பற்றி பார்ப்போம்.

வாஸ்து: வடக்கு திசையில் என்ன பொருட்கள் வைக்கலாம்? வைக்கக்கூடாது? | Why North Direction Is Important In Vastu

2026: பங்குனி மாதத்தில் தவறவிடக்கூடாத முக்கியமான விசேஷ மற்றும் விரத நாட்கள்

2026: பங்குனி மாதத்தில் தவறவிடக்கூடாத முக்கியமான விசேஷ மற்றும் விரத நாட்கள்

துளசி:

ஆன்மீக ரீதியாக வீடுகளில் துளசி வளர்ப்பது என்பது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கக் கூடியது. இது நம் வீட்டை சுற்றி இருக்கக்கூடிய காற்றை தூய்மைப்படுத்துவதோடு குடும்பத்தில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. குறையாத செல்வ பலன் கொடுக்கிறது.

புதினா:

செடிகளில் மிகவும் நறுமணத்தை கொடுக்கக் கூடியது புதினா. இது நமக்கு சோம்பேறித்தனத்தை நீக்கி நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது. வயிற்றுப் பிரச்சனைகளையும் போக்குவதற்கு உதவியாக இருக்கிறது. இதை நாம் வடக்கு திசையில் வைக்கலாம்.

கரிசலாங்கண்ணி:

சித்த மூலிகை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி நம்முடைய கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக இருக்கிறது. கூந்தல் பராமரிப்பு, கண் பார்வைக்கும் ஏற்றதாக இருக்கிறது.

வாஸ்து: வடக்கு திசையில் என்ன பொருட்கள் வைக்கலாம்? வைக்கக்கூடாது? | Why North Direction Is Important In Vastu

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு இந்த 4 விஷயங்கள் மட்டும் செய்யாதீர்கள்

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு இந்த 4 விஷயங்கள் மட்டும் செய்யாதீர்கள்

இந்த செடிகளை நாம் ஏன் வடக்கு திசையில் வைக்க வேண்டும்:

குபேர திசையில் இந்த செடிகளை நாம் வளர்க்கும் பொழுது நம்முடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும், வறுமையும் நீங்குவதாக சொல்கிறார்கள். அதோடு மூலிகைகளின் நறுமணமும் அவற்றின் பசுமையும் குடும்பத்தில் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகளை நீக்கி மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை கொடுக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US