வாஸ்து: வீடுகளில் தென்மேற்கு பாதிக்கப்பட்டால் ஆண்களுக்கு பிரச்சனையாம்

By Sakthi Raj May 02, 2026 04:30 AM GMT
Report

வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒரு கணிப்பு முறையாகும். அதாவது நாம் வசிக்கும் இடம் திசையானது சரியாக அமைந்து இருக்கிறதா என்று கணித்து தெரிந்து கொள்ளக்கூடியது தான் வாஸ்து. காரணம் சமையல் அறை, பூஜை, படுக்கையறை என்று ஒவ்வொன்றுக்கும் தனியான ஒரு திசை இருக்கிறது.

அந்த திசையில் அதற்குரிய இடத்தை அமைத்தால் மட்டும்தான் நம்மால் அந்த இடத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும். அப்படியாக, வாஸ்து ரீதியாக ஒருவர் அரசியல் ஜெயிக்க வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் கிழக்கு திசை பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமாம்.

பொதுவாகவே, ஒருவர் வீடு வாஸ்துவால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த நபர் அரசியலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற முடியும் என்று கணிப்பின் வழியாக பார்க்க முடிகிறது. மேலும், ஒருவர் வீடுகளில் தென்மேற்கு திசை பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த வீடுகளில் ஆண்களால் தாங்க முடியாது.

அந்த வீட்டை பெண்கள் ஆளக்கூடிய ஒரு நிலையை தான் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் வட கிழக்கு தென்மேற்கு உச்சமாக இருந்தால் அங்கு ஆண்களுடைய ஆட்சி இருக்கும். இதற்கு உதாரணமாக நாம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை எடுத்துக் கொள்ளலாம்.

சண்டைக்கு வாடா என்று அழைக்க கூடிய கோபக்கார ராசிகள் யார் தெரியுமா ?

சண்டைக்கு வாடா என்று அழைக்க கூடிய கோபக்கார ராசிகள் யார் தெரியுமா ?

அதேபோல் மீனாட்சி அம்மன் ஆலயத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது இங்கு வட கிழக்கு மற்றும் தென்மேற்கு பாதிக்கப்பட்ட இருப்பதால் அங்கு பெண்களுடைய ஆட்சி நடக்கிறது என்று வாஸ்து ரீதியாக கணித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

அப்படியாக, வாஸ்து ரீதியாக நாம் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? எப்படிப்பட்ட வாஸ்து அமைப்பு ஒருவருக்கு வெற்றிகள் கொடுக்கும் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள். அதை பற்றி பார்ப்போம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US