மகா சிவராத்திரி அன்று நாம் ஏன் தூங்கக்கூடாது?
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி என்பது மிகவும் விஷேசமானது.பலரும் அன்றைய நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வார்கள்.இன்னும் சிலர் அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்று குலதெய்வம் கோயிலில் இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு செய்வார்கள்.
ஆக சிவராத்திரி என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்வது தான்.அப்படியாக,பலருக்கும் நாம் ஏன் சிவராத்திரி என்று கண்விழித்து வழிபாடு செய்யவேண்டும் என்பது தெரிவதில்லை.அதை பற்றி பார்ப்போம்.
இந்த வருடம் மகாசிவராத்திரி வருகின்ற பிப்ரவரி 26, புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த மஹாசிவராத்திரியே சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வாகும்.ஆக சிவன் கோயில்களில் மஹாசிவராத்திரி அன்று மக்கள் கூட்டம் அலைமோதும்.
பல இடங்களில் மகாசிவராத்திரி பண்டிகை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமண விழாவாக கொண்டாடப்படுகிறது.பால்குன மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியில் தான் சிவன்பார்வதி திருமணம் நடந்தது என்பது நம்பிக்கை.
இந்த நாளில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிவபெருமானை வழிபட கணவன் மனைவிக்கிடையில் உறவு பலப்படும்.இந்த நாளில் யார் ஒருவர் சிவபெருமானை வழிபாடு செய்கின்றார்களோ அவர்களுக்கு உடல் உபாதைகள் விலகி நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
மேலும்,அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் எல்லம் விலகி வளமான வாழ்க்கை அமையும்.மேலும்,உஜ்ஜைனில் உள்ள மகா காளேஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி அன்று சிவ நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த 9 நாட்களில் சிவபெருமானுக்கு மணமகன் போல் அலங்காரம் செய்யப்பட்டு, மஞ்சள் மற்றும் மருதாணி இடப்படுகிறது.ஆக கடவுளின் பரிபூர்ண அருள் கிடைக்வும்,குடும்பத்தில் சந்தோசம் நிலைக்கவும் வருகின்ற மஹாசிவராத்திரி அன்று வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுப்பதோடு சிவன் அருளால் சிந்தனை தெளிவடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |