இந்த உலகத்தில் வீழ்த்தவே முடியாத மனிதர்கள் யார் தெரியுமா?
மனிதனாக பிறந்த அத்தனை பேரும் கட்டாயம் கஷ்டங்களை அனுபவித்தாக வேண்டும். துன்பம் என்பது காலத்தினால் நமக்கு கொடுக்கக் கூடிய பதில். அதாவது துன்பம் வருகின்ற பொழுதுதான் நம்மை அறிகின்றோம், துன்பம் வருகின்ற போது தான் நம் உற்றார் உறவினர்களை உணர்கின்றோம், துன்பம் வருகின்ற பொழுதுதான் இறைவனை சரண் அடைகின்றோம்.
ஆக காலம் ஒரு மனிதனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. அதை அவனை அவனுக்கான உரிய காலம் வரும் பொழுதும் அதை கட்டாயம் செய்ய தூண்டுகிறது.
இப்படியாக காலம் எப்படி வேண்டுமானாலும் நமக்கு எதிராக திரும்பட்டும், எவ்வளவு வேகமான புயல் காற்றை கொண்டு நம்மை துரத்தட்டும், இந்த ஒரு விஷயம் இருந்துவிட்டால் அந்த மனிதனை யாராக இருப்பினாலும் சரி அசைக்கவே முடியாது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.
ஒரு மனிதனுடைய எண்ணமும் செயலும் தர்மம் நிறைந்ததாகவும் இறை நம்பிக்கை கொண்டதாகவும் இருந்தால் அவனை யாராலும் அசைக்க முடியாது. தர்ம நெறியும் இறை நம்பிக்கையும் உள்ள மனதில் இறைவன் குடிக்கொள்கின்றான்.
அதாவது எவ்வளவு இக்கட்டான நிலை வந்தாலும் சரி அவர்கள் மனதில் இருக்கும் இறைவனை அவர்கள் விடுவதில்லை. அமைதி கொண்ட உள்ளத்தில் தான் இறைவன் இருப்பான். அதனால் இவர்கள் ஒரு பொழுதும் தங்களுடைய மனதை திசை தடுமாற விடுவதில்லை, அறம் தவறிய எண்ணத்திற்கு இடம் கொடுப்பதில்லை.
உலக வாழ்க்கைக்கு பயனற்ற ஆணவத்தை அவர்கள் துளியும் மதிப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் "உடலில் உயிர் இல்லாமல் போகட்டும் ஆனால் என் மனதில் இறைவனை நான் எப்பொழுதும் விடமாட்டேன் " என்று தீர்க்கமாக வாழக்கூடியவர்கள்.
இவ்வாறான மனிதர்கள் காலத்தினால் எவ்வளவு தூரம் தள்ளப்பட்டாலும், காலத்தினால் எவ்வளவு ரணங்களை அவர்கள் சந்தித்தாலும், இறைவனை மனதில் கொண்டு நம்பிக்கையோடு எழுந்து வருகிறார்கள்.
அதனால் இந்த மனிதர்களிடம் காலமும் தோற்றுவிடும். ஆக மனதில் நம்பிக்கையும் இறைவனும் கொண்டு இருக்கும் உள்ளத்தை எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஆதலால் காலமும் உங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்றால் மனதில் தர்ம நெறியும் இறை நம்பிக்கையும் கொள்ளுங்கள். எதிரிகளை உங்களிடம் சரண் செய்யும் அந்த காலம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







