வாழ்க்கையில் வெற்றிகள் பெற வேண்டுமா- வியாழக்கிழமை இவரை பற்றிக்கொள்ளுங்கள்
நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களும் கஷ்டங்களும் கடந்து செல்ல வேண்டும் என்று ஒரு கட்டாயம் இருக்கின்றது. பல போரட்டம் கடந்து ஜெயிப்பது தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. இந்த போராட்டத்தில் பலரும் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.
ஆக நம்முடைய வாழ்க்கையில் நாம் நல்ல ஏற்றத்தை பெற வியாழக்கிழமை அன்று இவரைப் பற்றிக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதை பற்றி பார்ப்போம்.
ஜோதிடத்தில் வியாழன் என்றாலே சுப கிரகமான குரு பகவானுக்கு உரிய நாளாகும். ஒருவர் குரு பகவானுடைய அருளை பெற வியாழக்கிழமை மிகச் சிறந்த நாளாகும்.
மேலும், எவர் ஒருவர் தொடர்ந்து மூன்று வருடங்கள் வியாழக்கிழமைகளில் குருபகவானை நினைத்து வழிபாடு செய்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு குரு பகவானின் பரிபூர்ண அருளை பெறலாம் என்கிறார்கள்.
அதோடு ஜோதிடத்தில் நவக்கிரகங்களில் சுப கிரகமாக குரு பகவான் இருக்கிறார். இவர் தான் ஒருவருடைய வாழ்க்கையில் அவர்களுக்கான ஞானம் கல்வி செல்வம் குழந்தை பாக்கியம் போன்றவற்றை வழங்கக்கூடிய கிரகமாக இருக்கிறார்.
அதனால்தான் ஒரு பழமொழி சொல்லுவார்கள், குரு பார்க்க கோடி நன்மை என்று. அதாவது குரு பகவான் உடைய பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.
அதனால் ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமாக இருக்கிறார் என்றால் அவர்கள் கட்டாயம் வியாழக்கிழமை என்று குரு பகவானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை பெறலாம்.
இதற்கு வியாழக்கிழமை அன்று காலையில் குளித்து குரு பகவானுக்கு உகந்த நிறமான மஞ்சள் என்பதால் அவருக்கும் மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிறத்தில் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து, அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
அன்றைய தினம் குருபகவானுக்குரிய மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வதும் சிறந்த பலன் அளிக்கும். நாம் இப்பொழுது குரு பகவானை வழிபாடு செய்யும்பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
குருபகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்.
இந்த மந்திரங்களை வியாழக்கிழமை அன்று குரு பகவானை மனதார நினைத்து வழிபாடு செய்து சொல்லி வரும் பொழுது நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருமண தோஷங்கள், குழந்தை தாமதம், கல்வியில் தோல்வி, வேலையில் குழப்பங்கள் போன்றவை விலகி குரு பகவானுடைய அருளால் நமக்கு நன்மைகளும், எதிர்பாராத வெற்றியும் சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







