2025-ல் அடுத்த கிரகணம் எப்போது ? இதோ முழு விவரங்கள்
2025 ஆம் ஆண்டு பொறுத்தவரையில் மொத்தம் நான்கு கிரகணங்கள் உருவாக உள்ளது. அதில் 2 சூரிய கிரகணமும் 2 சந்திர கிரகணமும் இந்த ஆண்டு நிகழ இருக்கிறது. இதில் முதல் கிரகணம் மார்ச் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை அன்று நிகழந்தது.
அதோடு கடைசி கிரகணம் செப்டம்பர் 21ஆம் தேதி நிகழவுள்ளது. மேலும், சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலே சந்திரன் வரும்பொழுது சூரிய கிரகணம் உருவாகிறது.
இதனால் சூரியனுடைய ஒளி பூமியை முழுமையாக அடைவதை அவை தடுக்கிறது. சந்திரனினுடைய நிழல் பூமியில் விழுவதால் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே நமக்கு தெரிகின்றது. இதில் பகுதி, வளைய மற்றும் முழு என மூன்று வகையான சூரிய கிரகணங்கள் இருக்கின்றன.
அடுத்ததாக சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்றால் சில நேரங்களில் பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும் சந்திர பூமியை சுற்றிவரும் பாதையிலும் சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்.
இந்த நேரத்தில் சூரியனுடைய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது இதனால் தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஜோதிடம் பொறுத்தவரையில் ஹோலி பண்டிகை அன்று முழு சந்திர கிரகணம் ஏற்படும்.
அடுத்ததாக முழு சந்திர கிரகணமாக செப்டம்பர் 7-8 தேதி அன்று காலை 9:56.8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:26:8 மணிக்கு முடிவடையும்என்பதால் நம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
மேலும் நான்காவது மற்றும் இந்த ஆண்டினுடைய கடைசி கிரகணம் சூரிய கிரகணமாகும் அவை செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 10:59:8 மணிக்கு தொடங்கி அதிகாலை 3. 23 மணிக்கி முடிவடைகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







