மருத்துவம் கைவிட்டாலும் முத்திரை கைவிடாது
சித்தர்கள் நம்முடைய ஆசிரியர்கள் என்றே சொல்லலாம். மனிதராக பிறந்தவர்கள் கட்டாயம் சித்தர்கள் ஆக முடியாது. அதே போல் சித்தர்கள் கட்டாயம் மனிதர்கள் அல்ல. அவர்கள் முற்றும் துறந்து எல்லாம் கற்று தெளிந்த யோகிகள் என்றே சொல்லாம்.
இந்த சித்தர்கள் மனிதர்கள் வாழ்க்கைக்கு தேவையான எல்லா விஷயங்களையும் நமக்கு விட்டு சென்று இருக்கிறார்கள். அதாவது மனிதன் அன்றாடம் சந்திக்கும் சிறு சிறு மன பிரச்சனைகளில் தொடங்கி, உடல் பிரச்சனைகள் வரை அதை எவ்வாறு சமாளிக்க வேண்டும்? அதற்கான தீர்வு என்ன என்று நமக்கு விடையை விட்டு சென்று இருக்கிறார்கள்.
அதே போல், சித்தர்கள் ஒருவரை கணிக்கும் திறன் கொண்டவர்கள். அதாவது ஒருவருக்கு உடலில் மனதில் என்ன பிரச்சனை என்று எளிதாக அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். ஒரு விஷயம் ஒரு மனிதனால் செய்ய முடியுமா?
அவன் கர்ம வினைக்கு ஏற்ப அந்த செயலை செய்தால் அவனுக்கு வெற்றி கிடைக்குமா? என்று அவர்கள் கணித்து சொல்லும் அளவிற்கு ஞானம் உண்டு. அப்படியாக, சித்தர்கள் நமக்கு உடல் உண்டாகும் குறைகள் நீங்க சில முத்திரைகள் விட்டு சென்று இருக்கிறார்கள்.
மிக முக்கியமாக, மருத்துவம் கை விட்டாலும் சித்தர்கள் விட்டு சென்ற முத்திரைகள் கை கொடுக்கிறது என்று சித்தர்கள் பற்றிய பல்வேறு தகவல் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் முனைவர் போகர் வசீகரன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெறிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |