தெய்வங்கள் திருமணம் செய்திருக்கும் பொழுது சில பக்தர்கள் ஏன் துறவிகள் ஆகிறார்கள்?
நம்முடைய இந்து மதத்தில் பக்தியின் வெளிப்பாடு என்பது பலவிதமாக இருக்கிறது. அதில் எல்லோரும் பிரம்மச்சரியம் என்ற ஒரு விஷயத்தை கையில் எடுப்பதில்லை. அப்படியாக எல்லோருக்கும் மனதில் ஒரு கேள்வி வரும்? சிவபெருமானுக்கு பார்வதி இருக்கிறார், விஷ்ணு பகவானுக்கு மகாலட்சுமி இருக்கிறார்.
ஆனால் பக்தர்கள் மட்டும் ஏன் சிலர் துறவி ஆகிறார்கள். துறவி ஆகுவதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்ன? என்று ஒரு முழுமையான ஆன்மீக விளக்கங்கள் தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம்.
இந்து மதத்தை பொறுத்தவரையில் திருமணம் செய்தவர்கள் மற்றும் திருமணம் ஆகாத துறவிகள் என்பவர்களை வெவ்வேறு பாதையில் பார்க்கக்கூடியது அல்ல. இருவருமே அவர்களுடைய ஒழுக்கமான வாழ்க்கையை இரண்டு வெவ்வேறு வடிவத்தில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அவ்வளவு தான்.

உதாரணமாக, ஹனுமனை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு பிரம்மச்சாரி. ஆனால் அவர் ஸ்ரீ ராமபிரானுடன் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கிறார். இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்டால் இருவரும் அவர்களுடைய வாழ்க்கையை வெவ்வேறு ஆன்மிக பாதையில் வாழ வேண்டும் என்று தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
சமஸ்கிருதத்தில் பிரம்மச்சரியம் என்பதற்கு "ஒருவர் தங்களுடைய இறுதி உண்மையை நோக்கி நகர்தல்" என்று சொல்வார்கள். இது அவர்களுடைய உடல் ரீதியான ஆசைகளை மட்டும் துறந்து செல்லக்கூடிய ஒரு பாதை அல்ல. அதில் அவர்களுடைய மனம் மற்றும் பிணைப்பு ஆகியவற்றிலிருந்து விலகி செல்லக்கூடிய ஒரு பாதை ஆகும்.
பிரம்மச்சரியம் என்பது இந்த உலக ஆசைகளில் இருந்து விலகி அவர்களுடைய சக்தியை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்று பற்றற்ற வாழ்க்கை வாழ்தல் ஆகும். மேலும், பிரம்மச்சரிம் என்பது நான்கு வகைகளாக இருக்கிறது. அதாவது முதலில் ஒழுக்கத்தோடு கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மாணவப் பருவமான ஒரு நிலையை குறிக்கிறது.
அதற்கு பிறகு திருமணம் ஆன ஒரு குடும்பஸ்தனை மற்றும் சமுதாய உறவுகளோடு இருக்கக்கூடிய ஒரு பண்பை குறிக்கிறது. பிறகு இந்த உலகத்தில் இருக்கக்கூடிய பொருட்கள் மீது இருக்கக்கூடிய ஆசையை விலக்கி இருக்கக்கூடிய ஒரு தன்மையை குறிக்கிறது. பிறகு சன்னியாசம் என்ற ஒரு நிலை, அதாவது இதுதான் கடைசியான ஒரு நிலையாக இருக்கிறது.
கடவுள் மட்டுமே என்னுடைய கதி என்ற ஒரு நிலையை நோக்கி செல்லக்கூடிய ஒரு பயணத்தை குறிக்கிறது. ஆக பிரம்மச்சரியம் என்பது வாழ்க்கையே வேண்டாம் என்று துறந்து செல்லக்கூடிய ஒரு பாதை அல்ல. அவை அந்த மனிதனுடைய சக்தியை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்று நிறைய விஷயங்களை ஆன்மீக ரீதியாக கற்றுக்கொள்ளக்கூடிய பாதையை ஆகும்.

தெய்வங்களுடைய திருமணங்கள்:
இந்து மதத்தில் தெய்வங்களுடைய திருமணம் என்பது நமக்கு சமநிலையை உணர்த்துகிறது. சிவபெருமான் பார்வதியை மணந்து கொள்ளும் பொழுது அது அவருடைய ஆசை அல்லாமல் சிவன் பாதி சக்தி பாதி என்று இணைந்து இயக்கக்கூடிய உலக உண்மையை நமக்கு உணர்த்துகிறது.
ஆண் பெண் இருவரும் சமமாக செல்லும் பொழுது தான் இந்த உலகம் நிதானமாக இருக்கும் என்ற ஒரு ஒற்றுமையை நமக்கு காட்டுகிறது. மேலும் நம்முடைய வரலாறுகளில் எல்லோரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று சொல்லிவிட முடியாது.
ஹனுமனை எடுத்துக் கொண்டால் அல்லது நாரத முனிவரை எடுத்துக் கொண்டால் பீஷ்மரை எடுத்துக் கொண்டால் இவர்கள் எல்லாம் திருமணம் செய்யாத பிரம்மச்சரி அகுவார்கள். ஹனுமனுக்கு எங்கிருந்து இவ்வளவு பெரிய சக்தி வந்தது என்று கேட்டால் அவர் ஸ்ரீ ராமபிரான் உடைய பக்தனாக அவருக்கு மட்டுமே தொண்டு செய்து அவருடைய சக்தி நிலையை இன்னும் உயர்நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
ஆதலால் ஹனுமன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்காக அவர் வாழ்க்கை வெறுத்து நிலையில் சென்றார் என்பது அல்ல. அதோடு நம்முடைய இந்து சமயத்தில் திருமணமானவர்கள் மற்றும் பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பவர்கள் இருவரும் தேடக்கூடிய ஒரு பாதை என்றால் மோட்சம் தான். ஆக திருமணம் ஆனவர்களும் அவர்கள் அவர்களுடைய இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு கடவுளை தேடுகிறார்கள்.

திருமணம் ஆகாமல் பிரம்மச்சரியம் கடைபிடித்து கொண்டிருப்பவர்கள் ஒரு வழியில் இறைவனை தேடி அவர்கள் மோட்சத்தை நோக்கி செல்கிறார்கள். இங்கு நாம் அதிகப்படியான ஒரு சுதந்திரத்தை காண முடிகிறது. ஆன்மிக பயணம் என்பது ஒருவரை கட்டாயமாக இழுத்து செல்லக்கூடிய ஒரு தண்டனை அல்ல.
அது மனரீதியாக ஆன்மா ரீதியாக தேடி செல்லக்கூடிய ஒரு புனிதமான ஒரு பாதையாகும். ,மனிதர்கள் ஆகிய நாம் இங்கு எல்லோரும் ஒவ்வொரு விதமான தேடுதலில் இருக்கின்றோம். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, அவர்களுடைய ஆன்மீக தேடுதலில் ஈடுபடுகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது.
அதனால் நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய வாழ்க்கை எந்த பாதையாக இருந்தாலும் சேரக்கூடிய இடம் ஒரே இடமாகத்தான் இருக்கிறது. அது இறைவன் எனும் காலடியில் சரண் அடைக்கிறது. ஆக நாம் செய்யக்கூடிய விஷயங்களை சரியாகவும் தெளிவாகவும் தெரிந்து கொண்டு செய்யும் பொழுது வாழக்கூடிய வாழ்க்கையை மிகவும் நிம்மதியாக வாழலாம்.
இங்கு எந்த ஒரு வாழ்க்கையும் வெறுப்பின் ரீதியாக வரக்கூடியது அல்ல அவ்வாறு வெறுப்பின் ரீதியாக முடிவில் கிடைக்கக்கூடிய பதில்கள் நம்மை நிம்மதியான வாழ்க்கைக்கு வழி வகுப்பதில்லை. அவை நம்மை இன்னும் துன்பத்திற்கு தான் கூட்டிச் செல்கிறது.
அதனால் மனம் தேடும் பாதையை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கான பாதையில் பயணித்து இறைவனுடைய அருளைப் பெற்று மோட்சம் அடைவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |