சிவ வழிபாட்டில் மஞ்சள் குங்குமம் பயன்படுத்தக்கூடாது.. காரணம் தெரியுமா?
ஒருவருக்கு வாழ்க்கையில் அமைதி வேண்டும், வாழ்க்கையின் உண்மை நிலை தெரிய வேண்டும் என்றால் அவர்கள் கட்டாயம் சரணடைய வேண்டிய தெய்வம் சிவபெருமான் தான். ஆனால் நாம் பலரும் சிவவழிபாட்டில் ஒரு விஷயத்தை கவனிக்க தவறி இருப்போம்.
அதாவது சிவ வழிபாடு என்று எடுத்துக் கொண்டால் அங்கு மஞ்சள் குங்குமம் இடம்பெறுவதில்லை. சிவனுக்கு உரிய பொருட்கள் ஆன சந்தனம் வில்வ இலை, பச்சரிசி, திருநீறு மட்டுமே இடம் பெறுகிறது.
அவருடைய அருளை நமக்கு பரிபூரணமாக பெற்றுக் கொடுக்கக்கூடிய தாக கருதப்படுகிறது. இருப்பினும் சாஸ்திரங்களில் மிகவும் மங்களகரமான பொருட்களாக கருதப்படும் மஞ்சள் குங்குமம் சிவ வழிபாட்டில் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்படுகிறது அதற்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

மஞ்சள் குங்குமம்:
நம்முடைய இந்து மதத்தில் எந்த ஒரு சுப காரியங்கள் நடந்தாலும் அதில் மஞ்சள் குங்குமம் இல்லாத நிகழ்வுகளை நாம் காண முடியாது. அதைப்போல் இவை இரண்டுமே மிகவும் மங்களகரமான பொருட்களாக கருதப்படுகிறது. இவை நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க தூண்டக்கூடிய ஒரு அம்சமாகவே மஞ்சள் குங்குமம் இருக்கிறது.
அதனால் திருமணமான பெண்கள் எப்பொழுதும் குங்குமம் நெற்றியில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அவ்வாறு வைக்கும் பொழுது அவர்களை அறியாமல் ஒரு புத்துணர்ச்சி அவர்களுக்குள் வரும். ஆனால் சிவபெருமான் இவ்வாறான இன்ப வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகிய துறவி என்று சைவ சித்தாந்தம் நமக்கு கூறுகிறது.
அதாவது மஞ்சள் உடல் அழகு மங்களம் இல்லற வாழ்க்கையுடன் தொடர்புடையதாக கருதப்படுவதால் அதை வழிபாட்டிற்கு நாம் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார்கள். அதனால் தான் திருநீறு சிவபெருமானுடைய முழுமையான அடையாளமாக இருக்கிறது. 63 நாயன்மார்களில் திருஞானசம்பந்தர் பாடிய மந்திரமாவது நீறு என்று வாக்கியமே திருநீற்றுனுடைய மகிமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

திருநீறு பசுவின் சாணம், பசு நெய், மூலிகைகள் கொண்டு மிகுந்த தவமும் சுத்தமும் நிறைந்து தயாரிக்கப்படக்கூடிய இந்த திருநீறானது அழகுக்காக மட்டும் அல்ல நம்முடைய அகங்காரத்தை அழித்து வாழ்க்கை நிலையானது அல்ல என்று உணர்த்தி மாயை உலகில் எல்லாம் ஒரு நாள் மாயையாகும் என்கின்ற அற்புதத்தை நமக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு அற்புதமான உண்மையின் உருவமாக இருக்கிறது.
சிவனும் உண்மையின் வடிவம் என்பதால் இந்த உண்மையை அவர் விரும்பி அவருடையதாக வைத்திருக்கிறார். அதனால் தான் சிவ பக்தர்கள் அனைவரும் திருநீறு ஒன்று போதும் எனக்கு அவனை நினைத்து வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடுவேன் என்கின்ற ஒரு மனநிலையை கொண்டிருக்கிறார்கள்.
மேலும், அகிலத்தை ஆளும் சிவபெருமான் அக்னி வடிவமாகவும் கருதப்படுகிறார். அதனால் தான் அவருக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய பொருளை நாம் படைத்து வழிபாடு செய்கின்றோம். அதே சமயம் மஞ்சளை எடுத்துக்கொண்டோம் என்றால் அவை ஒருவர் உடல் நிலையில் இருக்கக்கூடிய வெப்பநிலையை சீராக பயன்படுத்தக்கூடிய பொருளாகும்.
குங்குமம் உடலில் இருக்கக்கூடிய ஆற்றலை அதிகரிக்க செய்யக்கூடிய ஒரு பொருளாகும். அதனால் இவை இரண்டுமே செவ்வ வழிபாட்டிற்கு நாம் பயன்படுத்தக் கூடாத தவிர்க்க வேண்டியதாக சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |