மனிதனுக்கு ஏன் இறைநம்பிக்கை அவசியம்?
பூமியில் மனிதர்களாக பிறந்தோம் மறைந்தோம் என்று இல்லாமல் வாழும் காலத்தில் உண்மைத்துவம் புரிய வேண்டும்.அப்பொழுது நாம் இறக்கும் தருவாயில் நம் ஆன்மா சிறிதளவாவது மகிழ்ச்சி அடையும்.அவ்வாறான உண்மை அறிய நாம் என்ன செய்யவேண்டும்?தியானம் செய்ய பழக வேண்டும்.
இறைவன் அருகில் செல்ல வழிபட வேண்டும்.அப்படியாக பலரும் இந்த இறைவழிபாடு ஏன் அவ்வளவு அவசியம் என்ற குழப்பத்துடன் இருக்கிறார்கள்.அவ்வாறாக ஒரு மனிதனுக்கு ஏன் இறைநம்பிக்கை அவசியம் என்று ஒரு பக்தன் கிருஷ்ணரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார் அதை பற்றி பார்ப்போம்.
பக்தன் :கிருஷ்ணா, ஒரு மனிதன் உயிர் வாழ இறை நம்பிக்கை ஏன் அவ்வளவு அவசியம் ஆகிறது?
கிருஷ்ணா:கிருஷ்ணரும் அந்த பக்தனிடம் நான் நாளை கூறுகிறேன் என்று விட்டுவிட்டார்.
மறுநாள் விடிந்தது.
கிருஷ்ணா:அந்த பக்தனிடம் நண்பா, பசு எப்படிப்பட்ட விலங்கு?நல்ல விலங்கா என்று கேட்கிறார்.
பக்தன்:கிருஷ்ணா நீ கேட்பது எனக்கு மிகவும் ஆச்சிரியத்தை கொடுக்கிறது.பசு என்றாலே எங்களுக்கு நீதானே கிருஷ்ணா ஞாபகம் வருவாய் என்கிறார்.
கிருஷ்ணா:சரி அது இருக்கட்டும்.நான் கேட்ட கேள்விக்கான பதில் இன்னும் வரவில்லையே என்றார் கிருஷ்ணர்.
பக்தன்:கிருஷ்ணா விலங்குகளிலேயே சிறந்தது பசுதான். போதுமா என்றான்.
கிருஷ்ணா:சரி பசு தான் உலகிலே சிறந்த விலங்கு என்றால் ஏன் பசுவை இன்னொருவன் ஓட்டி செல்கிறான். அதுவே அதன் செயல்களை செய்து விடுமே அல்லவா?என்றார் கிருஷ்ணர்.
பக்தன்:கிருஷ்ணா பசு என்ன மனிதர்கள் போல் என்ன ஆறறிவு கொண்டதா? எங்காவது தவறான பாதையில் சென்றால் என்ன செய்வது.அது சரியான பாதையில் செல்கிறதா என்று கவனிக்க ஒரு மேய்ப்பாளன் கண்டிப்பா தேவைதானே என்றான்?
கிருஷ்ணா:ஹ்ம்ம் நீ என்னிடம் கேட்ட கேள்விக்கான பதில் இதுவே என்றார் கிருஷ்ணர். மனிதர்கள் சிலர் இன்னும் அறியாமையில் இருக்கிறார்கள்.அவர்கள் தவறான பாதையில் சென்றால் என்ன செய்வது?அவனை படைத்தவன் அவனுக்கு சரியான பாதையை சொல்லிக்கொடுக்க வேண்டும் அல்லாவா?
ஆக,மனிதன் ஞான பாதை அடைய ஒரு மேய்ப்பாளனாக நான் தேவைதானே ?என்றார் கிருஷ்ணர்.
பக்தன்: அருமை கிருஷ்ணா. என்னை தெளிய வைத்தாய்.என்று சரண் அடைந்தார்.
ஆக சமயங்களில் மெய்மறந்து சுற்றும் மானிடர்களை வழிநடத்துவது அவனின் இறைவழிபாடு தான்.வாழ்வின் அர்த்தமும் அதன் சுவாரசியமும் புரிய மனிதனுக்கு கட்டாயம் இறைநம்பிக்கை அவசியம்.தெளிந்து வாழ்வோம்.அவனை சரண் அடைவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |